WATCH VIDEO: 'ஹெலிகாப்டர் ஷாட்' அடிக்கிறதுல.. தல தோனிக்கே 'டப்' கொடுப்பார் போல!

Home > தமிழ் news
By |

தோனி ஸ்டைலில் ஹெலிகாப்டர் ஷாட் அடித்து பந்தை சிக்சருக்கு பறக்கவிட்ட ரசித் கானை இந்திய வீரர் சேவக், எழுந்து நின்று பாராட்டினார்.

 

டி-10 கிரிக்கெட் லீக் தொடரை எமிரேட்ஸ் கிரிக்கெட் போர்டு,கடந்த ஆண்டு முதல் நடத்தி வருகிறது.இதில் கேரளா கிங்ஸ் அணி முதல் சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான தொடர் தற்போது நடக்கிறது.

 

இதில் மராத்தா அரேபியன்ஸ், பாக்தூன்ஸ் அணிகள் மோதிய போட்டியில் பாக்தூன்ஸ் அணி, 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இந்நிலையில் இப்போட்டியில்,பாக்தூன்ஸ் அணியின் 7 அடி பவுலரான முகமது இர்பான் வீசிய பந்தை,மராத்தா அரேபியன்ஸ் அணியின், ஆப்கான் வீரர் ரசித் கான், முன்னாள் இந்திய கேப்டன் தோனியை மிஞ்சும் அளவு ஹெலிகாப்டர் ஷாட் அடித்து பந்தை சிக்சருக்கு அனுப்பினார்.இதைப் பார்த்து ஆச்சரியப்பட்ட சேவக், எழுந்து நின்று அவரைப் பாராட்டினார்.

 

இந்நிலையில் இந்த வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ரசித் கான், தோனிக்கு சவால் விடும் விதமாக, தோனி பாய் சக்சஸ் என பதிவிட்டுள்ளார்.

MSDHONI, CRICKET, RASHID KHAN, HELICOPTER SHOT, T10 LEAGUE

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS