''தல தோனி'' 4-வது ஆர்டரில் இறங்கும் ரகசியம் இதுதான்...மனம் திறந்த பிரபல கிரிக்கெட் வீரர்!

Home > தமிழ் news
By |

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரில் தனது அதிரடியை தொடங்கிய தோனி,உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் வெற்றிக்கு நிச்சயம் பக்கபலமாக இருப்பார் என,இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.மேலும் தோனி ஏன் 4-வது ஆர்டரில் களமிறங்குகிறார் என்ற காரணத்தையும் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் 'பெஸ்ட் பினிஷெர்' என அழைக்கப்படும் தோனிக்கு 2018-ம் ஆண்டு சிறப்பான வருடமாக அமையவில்லை.காரணம் கடந்த வருடம் 20 போட்டிகளில் விளையாடிய டோனி 275 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார்.இதனையடுத்து வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான டி-20 தொடர்களிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.இது ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.தோனி இல்லாத அணி எப்படி இருக்குமோ என பல ரசிகர்களும் புலம்பி வந்தனர்.

இந்நிலையில் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் இடம்பெற்ற தோனி,தனது நிதானமான ஆட்டத்தின் மூலம் அரை சதத்தினை கடந்தார்.ஆனால் இந்த போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்தது.தோனியின் மெதுவான ஆட்டமே தோல்விக்கு காரணம் என விமர்சனம் எழுந்தது.

இந்நிலையில் அடுத்த இரண்டு போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தோனி கடைசிவரை ஆட்டமிழக்காமல் இந்திய அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார்.இந்தத்தொடரில் மூன்று அரைசதம் அடித்த தோனி தொடர் நாயகனாகத் தேர்வுசெய்யப்பட்டார்.

இந்நிலையில் இதுகுறித்து பேசிய சுரேஷ் ரெய்னா ''தோனி எப்போதுமே ஆட்டத்தை வெற்றிகரமாக முடிக்கக்கூடியவர்.தற்போது அவர் தனது பழைய ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.தோனி 4-வது ஆர்டரில் களமிறங்குவதற்கு ஆட்டத்தை குறித்த சரியான கணிப்பே காரணம்.

4-வதாக களமிறங்கும் போது, களத்தில் சிறிது நேரம் பந்துகளை கணித்துவிட்டு அதிரடியாக விளையாட முடியும்.மேலும் வரும் உலககோப்பையின் போதும் தோனி 4-வதாக களமிறங்குவதே சரியானதாக இருக்கும்'' என ரெய்னா கூறியுள்ளார்.

CRICKET, SURESHRAINA, MSDHONI, BCCI, NO 4 BATTING

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS