தமிழ்நாட்டில் பட்டாசு வெடிக்க நிர்ணயிக்கப்பட்ட நேரம் அதிகரிப்பு: உச்சநீதிமன்றம்!

Home > தமிழ் news
By |

பட்டாசு வெடிப்பது தொடர்பாக தொடரப்பட்ட பொதுநல வழக்கில் முன்னதாக தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் டெல்லி உள்ளிட்ட மாநிலங்களின் சுற்றுச் சூழல் கருதி இரவு நேரத்தில் அதுவும் 2 மணி நேரம் மட்டுமே அனுமதி அளித்திருந்தது. 

 

ஆனால், சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் மற்றும் தமிழக அரசு சார்பாக  பட்டாசு வெடிக்கும் நேரத்தை அதிகப்படுத்த வேண்டும் என தொடரப்பட்ட வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரவே, தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்கள் பட்டாசு வெடிப்பதற்கான நேர காலம் அதிகரிக்கப்பட்டு ஒட்டுமொத்தமாக 4 மணி நேரம் பட்டாசு வெடிக்க உச்சநீதிமன்றம் அனுமதித்துள்ளது. 

 

இந்த 4 மணி நேரம் பகலில் 2 மணி நேரமாகவும், இரவில் 2 மணி நேரமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பகலில் வெடிக்கப்படும் 2 மணி நேரத்தை தமிழக அரசே முடிவு செய்துகொள்ளலாம் என உச்சநீதிமன்றம் அனுமதி அளித்து தீர்ப்பளித்துள்ளது. 

SUPREMECOURT, TAMILNADU, FIRECRACKERS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS