அரசு தேர்வில் முதலிடம் பிடித்த 'சன்னி லியோன்'...'மெரிட் லிஸ்ட்' வெளியானதால் 'அதிர்ச்சியில் அதிகாரிகள்'!

Home > தமிழ் news
By |

இளநிலை பொறியாளர் பணிக்கான தேர்வில் பாலிவுட் நடிகை சன்னி லியோன்,98.5 சதவீத மதிப்பெண்களுடன் முதலிடம் பிடித்திருப்பதாக வெளியான பட்டியல் கடும் அதிர்ச்சியையும்,சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநில பொது சுகாதாரப் பொறியியல் துறையில்,காலியாக இருந்த இளநிலை பொறியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.மொத்தமுள்ள 214 பணியிடங்களுக்கு 17 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்திருந்தனர்.இதற்கான முதல் கட்ட தேர்வு நடைபெற்றது.இந்த முதல் நிலை தேர்வில் வெற்றி பெற்ற  642 பேர் இரண்டாம் கட்ட தேர்வுக்கு தேர்தெடுக்கப்பட்டனர்.

இந்நிலையில் இரண்டாம் கட்ட தேர்வுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் தகுதி பட்டியல் அந்த துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டது.அதில் 98.5 சதவீத மதிப்பெண்களுடன் நடிகை சன்னி லியோன் பெயர் முதலிடத்தில் இருக்கிறது.இது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரம் குறித்து பேசிய சுகாதாரத்துறை இணை செயலாளர் ''முதலிடம் பெற்றிருக்கும் விண்ணப்பத்தில் சன்னி லியோனின் பெயர் இடம்பெற்றிருக்கிறது.அதில் அவரது வயது 27 என்றும் 5 வருட அனுபவம் உள்ளவர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.இது போலியான விண்ணப்பமா அல்லது அந்த நடிகையின் பெயரில் யாரேனும் அனுப்பி இருக்கிறார்களா என்பதனை உறுதி செய்ய முடியவில்லை.சான்றிதழ் சரிபார்த்த பின்பு தான் அதுகுறித்து உறுதியான தகவலை தெரிவிக்க முடியும்'' என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் கடும் புயலை கிளப்பியுள்ளது.மக்களுக்கு அரசு வேலையில் இருக்கும் நம்பகத்தன்மையை இது கேள்விக்குறியாக்கி இருப்பதாக  மாநில எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் கடுமையாக சாடியுள்ளார்.இதன் மூலம் அரசு போலியானவர்களுக்கு அரசு வேலையில் வாய்ப்பினை வழங்குவதாக கடுமையாக தெரிவித்துள்ளார்.

SUNNYLEONE, EXAM, TEJASHWI YADAV, NITISH KUMAR, BIHAR

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS