'எஜமானரை இழந்து கலங்கி நிற்கும் சுல்லி'...அனைவரையும் கலங்க வைத்த புகைப்படம்!

Home > தமிழ் news
By |

அமெரிக்க முன்னாள் குடியரசு தலைவர் ஜார்ஜ் ஹெர்பெர்ட் வாக்கர் புஷ்யின்,மரணத்தை தாங்க முடியாமல் சோகத்தில் படுத்திருக்கும் அவரது வளர்ப்பு நாயின் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

 

பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டிருந்த,அமெரிக்க முன்னாள் குடியரசு தலைவர் ஜார்ஜ் ஹெர்பெர்ட் வாக்கர் புஷ், கடந்த 1-ம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். இதற்கிடையில், கடந்த ஏப்ரல் மாதம் தன் மனைவி பார்பரா புஷ் இறந்தபிறகு, அவரது உடல்நிலை மிகவும் மோசமானது. கடந்த சில மாதங்களில் மட்டும், இரண்டு முறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வீடு திரும்பியுள்ளார். இந்நிலையில் அவரின் இறுதி சடங்கு வரும் 6ம் தேதி நடைபெற உள்ளது.

 

இந்நிலையில் அவரின் உடல் இன்று எலிங்டன் ரிசர்வ் தளத்திற்குக் கொண்டு செல்லப்பட இருக்கிறது.இந்நிலையில்,புஷ் வீட்டின் செய்தித்தொடர்பாளர் ஜிம் மெக் க்ராத் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஒரு நெகிழ்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்.அதில்,‘ பணி முடிந்தது’ என கேப்ஷன் இட்டுள்ளார். அந்தப் புகைப்படத்தில் H.W. புஷ்ஷின் வளர்ப்பு நாய் ‘சுல்லி’ மிகவும் சோகமாக அவரின் உடல் வைக்கப்பட்டிருந்த இடத்தின் அருகில் படுத்திருந்தது. இந்தப் புகைப்படம் உலக அளவில் அனைவரது மனத்திலும் இடம்பிடித்து, சமூக வலைதளத்தில் அதிகம் பகிரப்பட்டுவருகிறது.

 

H.W. புஷ் பார்பரா நோயால் பாதிக்கப்பட்டு, இருசக்கர நாற்காலியில் சில காலம்,தனது காலத்தை கழித்து வந்தார்.அப்போது அவருக்கு பல வழிகளிலும் உதவியாக இருந்தது சுல்லி தான்.அவருக்கு தேவையான பொருட்களை எடுத்து வருவது,கதவு திறந்து விடுவது என பல வழிகளிலும் உதவியாக இருந்தது.இந்நிலையில் H.W. புஷ்யின் மரணம்  சுல்லியை வெகுவாக பாதித்திருப்பதாக ட்விட்டரில் பலரும் பதிவிட்டு வருகிறார்கள்

GEORGE H.W. BUSH, SULLY

OTHER NEWS SHOTS