கடந்த 16ம் தேதி அன்று முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்.இதை தொடர்ந்து நடைபெறும் அனைத்து நிகழ்வுகளில் எல்லாம் பாஜக மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொள்வது அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இது அரசியல் நாகரிகம் என்று இரு கட்சிகள் சொன்னாலும் இதை அரசியல் நோக்கர்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றார்கள்.

 

இந்நிலையில் மறைந்த திமுக தலைவர் மு.கருணாநிதியின் நினைவைப்போற்றும் வகையில் நினைவேந்தல் நிகழ்ச்சி, 30 ஆம் தேதி சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் அகில இந்திய தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு பா.ஜ.க. தலைவர் அமித்ஷாவுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது. அதனை ஏற்று நினைவேந்தல் கூட்டத்தில் அமித்ஷா பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

 

இந்நிலையில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா சென்னையில் நடைபெறும் திமுக தலைவர் கருணாநிதியின் அஞ்சலி கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளதாக, அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதை பாரதிய ஜனதா கட்சியும் உறுதி செய்த நிலையில் அக்கட்சியின் மூத்த தலைவர் சுப்ரமணியசாமி, அமித்ஷா கூட்டத்தில் கலந்துகொள்ள போவதில்லை என்ற முடிவை எடுத்திருப்பதாகவும், இது மகிழ்ச்சியான முடிவு என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்

 

இதனையடுத்து சுப்பிரமணியன் சுவாமியின் இந்தச் செய்தி அதிகாரப்பூர்வமானது அல்ல என்றும் இதற்கும்  பாரதிய ஜனதா கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை என அதன் மாநில ஊடகப் பிரிவு தலைவர் சுப்ரமணிய பிரசாத் தெரிவித்துள்ளார்.

BY JENO | AUG 25, 2018 12:31 PM #BJP #SUBRAMANIAN SWAMY #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS