'10 ஓவர்களில் 9 ரன், 8 விக்கெட்'.. டி20 போட்டியில் இப்படியும் ஒரு சாதனை!

Home > தமிழ் news
By |
'10 ஓவர்களில் 9 ரன், 8 விக்கெட்'.. டி20 போட்டியில் இப்படியும் ஒரு சாதனை!

கோலாலம்பூரில்(மலேசியா) ஐசிசி டி20 போட்டிக்கான ஆசிய மண்டலத்துக்கான தகுதிப்போட்டி நேற்று நடைபெற்றது.இதில் மலேசிய அணியை எதிர்த்து மியான்மர் அணி  மோதியது. டாஸ் வென்ற மலேசிய அணி முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்தது.போட்டி தொடங்கும் முன் மழை பெய்ததால், 10.1 ஓவர்களாக இந்த போட்டி குறைக்கப்பட்டது.

 

இதில் முதலில் ஆடிய மியான்மர் அணி 10 ஓவர்களில் 9 ரன்களை எடுத்து, 8 விக்கெட்டுகளை இழந்தது. அந்த அணி பேட்ஸ்மேன்கள் மைதானத்துக்குள் வருவதும், போவதுமாக இருந்தனர். இதில் 5 பேட்ஸ்மேன்கள் டக்-அவுட் முறையில் ஆட்டமிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இதைத்தொடர்ந்து பேட்டிங் செய்த மலேசிய அணி 1.4 ஓவர்களில் இலக்கை எட்டி, 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆட்டத்தை வென்றது.

CRICKET, MYANMAR, MALAYSIA

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS