'படிக்குற புள்ளைங்கள’ பிரியாணி வாங்க அனுப்பிய பள்ளி.. பெரும் சோகத்தில் பெற்றோர்!

Home > தமிழ் news
By |

பிரியாணி வாங்கிவரச் சொல்லி பள்ளி வார்டனால் அனுப்பப்பட்ட பள்ளி மாணவர்கள் இருவர் விபத்துக்குள்ளாகியதில் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் திருவண்ணாமலையில் பெருத்த சோகத்தை உண்டாக்கியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலையில் உள்ள அத்திப்பட்டு கிராமத்தில் செயிண்ட் ஜோசப் உண்டு உறைவிட பள்ளி ஒன்றில் பயிலும் பதினோராம் வகுப்பு மாணவரை அப்பள்ளிக்கு உட்பட்ட ஹாஸ்டல் வார்டன் பிரியாணி வாங்குவதற்கு அனுப்பியுள்ளார்.

அங்கு சுற்றுப்பட்டு கிராமப்புறங்களில் இருந்து 3000க்கும் மேற்பட்ட ஆண், பெண் என இருபால் மாணவர்களும் பயின்று வருகின்றனர். இங்கு பயின்ற பதினோராம் வகுப்பு மாணவரான மஞ்சுநாத் மற்றும் 10-ஆம் வகுப்பு மாணவர் பார்த்திபன் இருவரும் ஹாஸ்டல் வார்டனின் கட்டளையின் பேரில் அருகில் இருந்த ஜமுனாமரத்தூருக்கு பிரியாணி வாங்கச் சென்றுள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை பள்ளியில் நடந்த மருத்து சிகிச்சை முகாம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் ஒருவருக்கு பிரியாணி குறைந்ததால் இம்மாணவர்கள் இருவருக்கும் இருசக்கர வாகனமும் கொடுத்து பிரியாணி வாங்குவதற்காக அனுப்பப்பட்டது.

ஆனால் இருவரும் செல்லும்போது துரதிர்ஷ்ட வசமாக டிராக்டரில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளனர். இவர்களில் ஆதமங்களம் கிராமத்தைச் சேர்ந்த மஞ்சுநாத் சிகிச்சைப்பலனின்றி கவலைக்கிடமாக உயிரிழந்தார். உடன் சென்ற பார்த்திபன் உயிருக்கு போராடி வருகிறார். இதனால் மாணவர்களின் பெற்றோர்களும் உறவினர்களும் பள்ளி நிர்வாகத்திடம் சண்டையிட்டுள்ளனர். பள்ளிக்கு படிக்க வந்த தங்கள் மகன்களை இருசக்கர வாகனம் கொடுத்து எதற்கு அனுப்ப வேண்டும் என்று பெற்றோர்கள் கதறியுள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

SCHOOLSTUDENT, BIRYANI, BIZARRE, SAD, TAMILNADU

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS