திடீரென ஆபரேஷன் தியேட்டருக்குள் புகுந்து ’கால் துண்டை’ கவ்விக்கொண்டு ஓடிய நாய்!

Home > தமிழ் news
By |

பீகாரில் மருத்துவமனையின் ஆபரேஷன் தியேட்டர் ஒன்றுக்குள் புகுந்த நாய் ஒன்று ஆபரேஷன் செய்து, நோயாளியுடன் இணைக்கப்பட வேண்டிய வெட்டுண்ட கால் துண்டை  கவ்விக்கொண்டு ஓடிவந்த காட்சி பலரிடையே அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. 

 

பீகாரின் புக்ஸார் மாகாணத்துக்கு உட்பட்ட, ரயில் நிலையம் அருகே ஷிராம்ஜி எக்ஸ்பிரஸில் படிக்கட்டில் பயணம் செய்த ராம்நாத் மிஷ்ரா என்பவர் எதிர்பாராத விதமாக தவறி விழவும், அவரது வலது கால் பரிதாபமாக வெட்டுண்டது. 

 

உடனே அருகில் இருக்கும் சதார் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவரது கால்களை ‘டிரெஸ்ஸிங்’ எனப்படும் மருத்துவ சுத்தம் செய்யும் வேலையை செய்துவிட்டு, இணைப்பதற்கு தயாராக இருந்த நேரம், அந்த ஆபரேஷன் தியேட்டருக்குள் புகுந்த நாய் ஒன்று யாரும் பார்க்கும் முன்னரே, நொயாளி ராம்நாத்தின் கால்களை எடுத்துக்கொண்டு ஓடியுள்ளது.

 

நாயை அங்கிருந்தவர்கள் விரட்டிப்பிடிக்க முயன்றனர். ஆனால் நாய் வாயில் கவ்விக்கொண்டு நோயாளியின் கால்களை எடுத்துக்கொண்டு மருத்துவமனை வளாகத்தில் ஓடிவந்ததை கண்ட பலரும் மிரண்டுள்ளனர். 

STRAYDOG, DOGSTEALS, OPERATIONTHEATRE, PATIENT, BIHAR, BUXAR

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS