ஏம்மா இதெல்லாம் ஒரு காரணமா?.. 'ஸ்ட்ராபெர்ரி-ஊசி' வழக்கில் கைதான பெண்ணின் அதிர்ச்சி வாக்குமூலம்!
Home > தமிழ் newsகடந்த செப்டம்பர் மாதம் சூப்பர் மார்க்கெட்டுகளில் விற்கப்படும் பழங்களில் மெல்லிய ஊசியை மர்ம நபர்கள் மறைத்து வைத்து விடுவதாக, ஆஸ்திரேலிய ஊடகங்களில் தகவல்கள் பரவின. இதனையடுத்து ஸ்ட்ராபெர்ரி பழங்களை சாப்பிட்ட 3 பேர் ஊசி தொண்டையில் சிக்கி அவதிப்பட்டார்கள்.இதனால் ஆஸ்திரேலியாவில் இருந்து ஸ்ட்ராபெர்ரி பழங்களை இறக்குமதி செய்ய நியூசிலாந்து அரசு தடை விதித்தது.
இதைத்தொடர்ந்து ஸ்ட்ராபெர்ரி பழங்களில் ஊசியை மறைத்து வைத்தால் 15 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்படும் என்றும், இது தீவிரவாத செயல் என்றும் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் எச்சரிக்கை விடுத்தார்.
இந்தநிலையில் ஸ்ட்ராபெர்ரி பழங்களில் ஊசியை மறைத்து வைத்த காரணம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதுதொடர்பாக நேற்று 50 வயது மதிக்கத்தக்க பெண்(மை வுட் ட்ரின்) ஒருவரை ஆஸ்திரேலிய போலீசார் கைது செய்து இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
தான் வேலைபார்த்த இடத்தில் உள்ள முதலாளியின் மீது உள்ள கோபத்தால் இவ்வாறு அவர் செய்ததாக கூறப்படுகிறது. ஆனால் அது என்ன காரணம் என்பது வெளியாகவில்லை. எனினும்,''ஊசியில் இருந்த டி.என்.ஏ அவரின் டி.என்.ஏ-வுடன் ஒத்துப்போகிறது. இந்த வழக்கில் இது முக்கியமான சாட்சியாக இருக்கும்” என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த வழக்கு தற்போது வருகின்ற 22-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. முன்னதாக மை வுட் ட்ரின் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனு நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- இந்திய வீரர்களின் உணவில் 'மாட்டு இறைச்சி' வேண்டாம்; பிசிசிஐ வேண்டுகோள்
- அடுத்த 'சூப்பர் ஸ்டார்' என கொண்டாடப்பட்ட வீரர்.. கிரிக்கெட்டை விட்டு ஒதுங்கிய துயரம்!
- 'தாண்டிச்சென்ற பந்தை அந்தரத்தில் தாவிப்பிடித்த வீரர்'.. சூப்பர்மேனாகக் கொண்டாடும் ரசிகர்கள்!
- பூர்வகுடியை அந்நியப்படுத்துகிறதா ’தேசிய கீதம்’? சிறுமியின் கருத்தால் எழும் விவாதம்!
- ஸ்ட்ராபெர்ரி பழத்தில் 'ஊசியை' மறைத்து வைத்தால்.. 15 ஆண்டு சிறைதண்டனை!
- பூமியைத் தாக்கிய 'நெருப்புப்பந்து'....வைரல் வீடியோ உள்ளே !
- Teenager with dreams to work at Apple hacks into its network
- Shocking - Indian student killed in Australia after date with girl
- After 8 years of search, massive crocodile caught
- தவறான தொடர்பு: கணவனைக் 'கொலை செய்த' மனைவிக்கு 22 ஆண்டுகள் சிறை!