ஸ்ட்ராபெர்ரி பழங்களில் ஊசியை மறைத்து வைத்தால் 15 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்படும் என, ஆஸ்திரேலிய பிரதமர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

சூப்பர் மார்க்கெட்டுகளில் விற்கப்படும் பழங்களில் மெல்லிய ஊசியை மர்ம நபர்கள் மறைத்து வைத்து விடுவதாக ஊடகங்களில் தகவல்கள் பரவின. இதனையடுத்து ஸ்ட்ராபெர்ரி பழங்களை சாப்பிட்ட 3 பேர் ஊசி தொண்டையில் சிக்கி அவதிப்பட்டார்கள்.இதனால் ஆஸ்திரேலியாவில் இருந்து ஸ்ட்ராபெர்ரி பழங்களை இறக்குமதி செய்ய நியூசிலாந்து அரசு தடை விதித்துள்ளது.

 

இந்தநிலையில் ஸ்ட்ராபெர்ரி பழங்களில் ஊசியை மறைத்து வைத்தால் 15 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்படும் என்றும், இது தீவிரவாத செயல் என்றும் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

இதுகுறித்து சிட்னியில் இன்று அவர் அளித்த பேட்டியில்,''விரைவில் நாடாளுமன்றத்தைக் கூட்டி இந்தச் செயலில் ஈடுபடுபவர்களுக்கு அதிகபட்சமாக 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை கிடைக்க வழி செய்வோம். இந்தச் செயலால் மாநிலத்தில் பல்வேறு இடங்களில் ஸ்ட்ராபெரி பழங்கள் பறிப்பதும், விற்பனை செய்வதும் பாதிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்,''  என்று தெரிவித்தார்.

BY MANJULA | SEP 19, 2018 3:08 PM #AUSTRALIA #STRAWBERRY #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS