வர்தா புயல் போன்று வரும் ‘கஜா’ புயல்: தமிழகத்துக்கு ரெட்-அலர்ட்டா?
Home > தமிழ் newsதமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் நவம்பர் 14-15 ஆகிய தேதிகளில் மிக அதிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல், ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் மறு உத்தரவு வரும்வரை கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வர்தா புயல் போன்ற தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய கஜா புயலானது கடலூரின் பரங்கிப் பேட்டையில் கரையைக் கடக்கும் என்று ஐரோப்பிய வானியல் வல்லுநர்களின் தகவலை அடுத்து இந்த அறிவிப்பு சென்னை வானிலை ஆய்வு மையத்தினால் உறுதி செய்யப்பட்டது. மேலும் இந்த புயலுக்கு தாய்லாந்து நாட்டின் சார்பில் பரிந்துரைக்கப்பட்ட பெயரான கஜா என்கிற பெயர் வைக்கப்பட்டது.
வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியதனால், வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து வரும் கஜா புயல், 2 அல்லது 3 நாட்களில் தமிழகத்தை நோக்கி நகர வாய்ப்புள்ளதாகவும் இந்த புயல் நவம்பர் 14-15 தேதிகளில் கடலூர் - ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையை கடக்கும் என்றும் கூறப்பட்டுள்ளதை அடுத்து தமிழகத்துக்கு ரெட் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- இரவு நேரம் மெரினா பீச்சில் பெண்ணை கொன்று புதைத்த 2 பேர் கைது!
- ‘நீங்களே டாக்டர் என கையெழுத்து போடுங்கள்’: மது போதையில் அரசு மருத்துவர் செய்த காரியம்!
- காதல் மனைவியை கழுத்தறுத்து கொன்றுவிட்டு, கணவர் தப்பி ஓட்டம்!
- மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவது உறுதியா?: மத்திய அரசு வழக்கறிஞர்!
- ‘பெருமைப்படுத்துகிறது சர்கார்’: விஜய்-ஏ.ஆர்.முருகதாஸ்-சன் பிக்சர்ஸ் கூட்டணிக்கு நன்றி சொல்லும் மீனவர்கள்!
- தடை விதிக்கப்பட்ட நேரத்தில் பட்டாசு வெடித்த 12 வயது சிறுவன் உயிரிழப்பு: தந்தை கைது!
- ஹோட்டலுக்குள் புகுந்து சப்ளையரை சரமாரியாக தாக்கும் இன்னொரு ஹோட்டல் ஓனர் .. சிசிடிவி வைரல்!
- தீபாவளி அன்று மட்டும் ஒரே நாளில் விற்பனையான தொகையை கேட்டால் தலைசுற்றும்!
- Chennaiites Nail Rainwater Harvesting; Collect 1,00,000 Litres In 3 Hours
- மழை குறித்து வானிலை ஆய்வு மையம் முக்கிய அறிவிப்பு!