தெலுங்கானாவின் கொண்ட கட்டு மலைப்பாதை பகுதியில் சென்றுகொண்டிருந்த அரசு பேருந்து, ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து, பேருந்து பள்ளத்தில் கவிழந்து விபத்துக்குள்ளானது.

 

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு, மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை அதிகாரிகள்  விரைந்து சென்றனர். தொடர்ந்து, காயம் அடைந்தவர்கள் உடனடியாக அருகாமையில் இருந்த அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.

 

இந்த விபத்தில், 40 பயணிகளுக்கு  மேல் உயிரிழந்துள்ளதாகவும், 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும், தகவல்கள் வெளியாகியுள்ளன. பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.  

BY SIVA SANKAR | SEP 11, 2018 3:05 PM #ACCIDENT #TELANGANA #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS