கலைஞர் கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்துக்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின்,மு.க.அழகிரி மற்றும் துரைமுருகன் ஆகியோர் திடீரென வருகை புரிந்துள்ளனர்.
வயது மூப்பின் காரணமாக கருணாநிதிக்கு உடல் நலிவு ஏற்பட்டுள்ளது என்றும், சிறுநீரகத்தொற்று காரணமாக அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது எனவும், காவேரி மருத்துவமனை நேற்று மாலை அறிக்கை ஒன்றை வெளியிட்டது.இதைத்தொடர்ந்து அரசியல் தலைவர்கள்,தொண்டர்கள் அவரின் கோபாலபுரம் இல்லத்துக்கு முன் குவியத் தொடங்கினர்.
தொடர்ந்து இன்று மாலை கருணாநிதி உடல்நலத்துடன் இருப்பதாக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டார்.
இந்தநிலையில் சற்றுமுன் கோபாலபுரம் இல்லத்துக்கு கலைஞர் அவர்களின் தனி மருத்துவர் கோபால், ஸ்டாலின்,அழகிரி,துரைமுருகன்,தயாநிதி மாறன், கனிமொழி, ஆ.ராசா உள்ளிட்டோர் திடீரென வருகை புரிந்தனர். இதனால் கோபாலபுரம் இல்லத்தில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.
RELATED NEWS SHOTS
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- 'சந்திரனுக்கு தான் கிரகணம்;சூரியனுக்கு அல்ல'.. தொண்டர்கள் உருக்கம்!
- Vice President Venkaiah Naidu to pay Karunanidhi a visit
- Son MK Azhagiri pays visit to DMK Chief Karunanidhi
- PM Modi enquires about DMK Chief Karunanidhi's health, here is what he said
- கருணாநிதி இல்லத்திற்கு தலைவர்கள் வருகை; உடல் நலம் குறித்து விசாரிப்பு
- Top politician on DMK Chief Karunanidhi's health
- Hospital releases update on DMK patriarch M Karunanidhi's health
- கருணாநிதி உடல் நலம் குறித்த வதந்தி - மு க ஸ்டாலின் விளக்கம்
- மு.க. ஸ்டாலின் ஆளுநருடன் சந்திப்பு
- Chennai: Karunanidhi taken to hospital