குட்கா விவகாரத்தில் லஞ்சம் கொடுத்தவர், லஞ்சப் பணத்தை கொண்டு போய் சேர்த்தவர்கள் என பலரும் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், அதனை பெற்றுக்கொண்டதாகக் கூறப்படும் அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன் உள்ளிட்டோரை மட்டும் கைது செய்வதற்கு மட்டும் இன்னும்  தயக்கம் காட்டப்படுவது ஏன் என்று திமுக-வின்  புதிய தலைவர்  மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

முன்னதாக குட்கா விவகாரத்தில் தொடர்புடைய  6 பேரை போலீசார் கைது செய்திருந்தனர்.  தொடர்ந்து 30-க்கும் மேற்பட்ட இடங்களில் நடத்திய அதிரடி சோதனைகளுக்கு பிறகே இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

 

இந்த நிலையில், தற்போது புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலின் இந்த கேள்வியை எழுப்பினார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், முன்னதாக பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் செப்டம்பர் 10-ம் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நாடு தழுவிய “பாரத் பந்திற்கு” ஆதரவளிப்பதாகவும் கூறியுள்ளார்.

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS