அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் கலந்து கொண்ட, சவுந்தர்யா-விசாகன் திருமணம்
Home > News Shots > தமிழ் newsசென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யா-விசாகன் திருமணம் இன்று நடைபெற்றது.
ரஜினிகாந்தின் இளைய மகளான சவுந்தர்யா சந்திரமுகி, சிவாஜி, கோச்சடையான் உள்ளிட்ட படங்களுக்கு கிராஃபிக்ஸ் டிசைனராக பணியாற்றியுள்ளார். மேலும் தனுஷ் நடிப்பில் கடந்த 2017 -ல் வெளியான ‘வேலையில்லா பட்டதாரி-2’ என்கிற படத்தை இயக்கியும் உள்ளார்.
இந்நிலையில் சவுந்தர்யாவுக்கு தொழிலதிபர் விசாகன் என்பவருடன் கடந்த வாரம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. விசாகன் ‘வஞ்சகர் உலகம்’ என்னும் படத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இன்று சவுந்தர்யா-விசாகன் திருமணம் சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது. இதில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, நடிகர் கமல்ஹாசன் மற்றும் அரசியல் தலைவர்கள், திரையுலகினர் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
மேலும் மாலையில் வரவேற்பு நிகழ்ச்சி நடக்க இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
OTHER NEWS SHOTS
RELATED NEWS STORIES
- அக்காவின் கல்யாணத்துக்கு தங்கை எடுத்த சாகச முடிவு!
- 'திருநா, திருமா'வுடன் ரஜினி திடீர் சந்திப்பு.. தற்செயலான நிகழ்வா?..வைரல் போட்டோ!
- ‘தாலி கட்டும்போது புரோகிதர் சொல்லும் மந்திரத்தின் கேவளமான அர்த்தம் தெரியுமா?’:ஸ்டாலின்!
- ‘சாப்பாட்டில் வந்த சண்டை’.. திருமணத்தன்றே விவாகரத்து.. விநோத தம்பதியர்!
- தங்கிச்சிய வெளிநாடு அழைத்துச் செல்ல, அண்ணன் எடுத்த விநோத முடிவு..மிரண்டுபோன போலீஸ்!
- ‘மச்சான்.. என் மேரேஜ் இன்விட்டேஷன தூக்கி போட்ரு ப்ளீஸ்’.. அசரவைக்கும் காரணம்?
- ‘எனக்கு துணையாக இருப்பார்’.. நீண்ட நாள் தோழியை மணந்த பின் ஹர்திக் பேட்டி!
- 'திருமணத்தன்று பியூட்டி பார்லர் சென்ற பெண்ணுக்கு நடந்த கொடூரம்'.. பதறவைக்கும் வீடியோ!
- 'கிட்னி இல்லை என்றால் திருமணமும் இல்லை'.. இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!
- உயிருக்கு போராடிய தந்தை.. மகனும் மகனின் காதலியும் நள்ளிரவில் எடுத்த முடிவு!