‘யாரும் அழ வேண்டாம், நான் பிறந்ததே நாட்டிற்காக இறக்கத் தான்’.. மனதை உருக்கும் ராணுவ வீரரின் கவிதை!

Home > News Shots > தமிழ் news
By |

புல்வாமா பகுதியில் தற்கொலைப்படை நடத்திய தாக்குதலில் 40 -க்கும் மேற்பட்ட துணை ராணுவப்படை வீரர்கள் வீர மரணம் அடைந்த நிலையில், ராணுவ வீரரின் கவிதை ஒன்று மனதை உருகவைத்துள்ளது.

காஷ்மீர் மாநிலத்தில் இருந்து 2,500 -க்கும் மேற்பட்ட துணை ராணுவப்படை வீரர்கள் 78 பேருந்துகளில் ஸ்ரீநகர் நோக்கி பயணித்துக் கொண்டிருந்தனர். அவர்களது வாகனங்கள் புல்வாமா மாவட்டம் அவாந்திபோரா என்கிற இடத்தில் வந்து கொண்டிருந்தபோது, 350 கிலோ வெடிபொருள்களுடன் வந்த கார் துணை ராணுவப்படை வீரர்கள் வந்த பேருந்தின் மீது மோதி வெடித்து சிதறியது.

இந்த பேருந்தில் பயணித்த 40 -க்கும் மேற்பட்ட சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் உயிரிழந்தனர். இதில் தமிழகத்தை சேர்ந்த இரண்டு சி.ஆர்.பி.எஃப் வீரர்களும் உயிரிழந்து உள்ளனர்.

தற்கொலைப்படை தாக்குதலில் உயிரிழந்த தமிழக வீரர்களின் உடல்கள் ராணுவ மரியாதையுடன் அவர்களது சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டு  அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்நிலையில் ராணுவ வீரரின் கவிதை இணையத்தில் வெளியாகி மனதை உருக வைத்துள்ளது.

‘ஒருவேளை நான் போர்களத்தில் இறந்துவிட்டால், சவப்பெட்டியில் வைத்து என் வீட்டுக்கு அனுப்புங்கள்

என்  நெஞ்சு மீது பதக்கங்களை அணிவித்து, என் தாயிடம் சொல்லுங்கள் தேசத்திற்கு என்னால் முடிந்ததை சிறப்பாக செய்தேன் என்று
என் அப்பாவிடம் சொல்லுங்கள் என்னால் அவருக்கு இனி தொல்லை இல்லை என்று
என் சகோதரனிடம் சொல்லுங்கள் நன்றாக படிக்க வேண்டும் என்று, இனி என்னுடைய வண்டியின் சாவி நிரந்தரமாக அவனுக்குத்தான் என்றும் சொல்லுங்கள்
என் சகோதரியை வருத்தப்பட வேண்டாம் என்று சொல்லுங்கள், உன் சகோதரன் சூரிய அஸ்தமனத்துக்கு பிறகு நீண்ட ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கான் என சொல்லுங்கள்
என் நாட்டு மக்களிடம் சொல்லுங்கள் அழ வேண்டாம் என்று,
ஏனென்றால் நான்  நாட்டிற்காக இறக்க பிறந்த ராணுவ வீரன்’

மனதை உருக வைக்கும் இந்த கவிதை இணையத்தில் வைரலாகி வருகிறது.


PULWAMATERRORISTATTACK, RIPBRAVEHEARTS, CRPFJAWANS, CRPFKASHMIRATTACK, POEM

OTHER NEWS SHOTS

RELATED NEWS STORIES