'ஆசிரியர்களை ரெண்டு நாளா காணோம்'...ரோட்டில் அமர்ந்த தந்தை...வைரலாகும் வீடியோ!

Home > தமிழ் news
By |

தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.இதனால் ஆசிரியர்கள் பள்ளிக்கு வராததால்,மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படுவதாக பெற்றோர்கள் கவலை தெரிவித்திருந்தார்கள்.இந்நிலையில் கோவை மாவட்டத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் அஜீஸ் மஸ்தான் என்பவர், அரசுப் பள்ளியில் 5-ம் வகுப்பு படிக்கும் தன் மகள் அஜ்மிகா மற்றும் 1-ம் வகுப்பு படிக்கும் மகன் அஜ்மல் ஆகியோருடன் சேர்ந்து,ஆசிரியர்கள் போராட்டதிற்கு எதிர்ப்பு தெரிவித்து சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து பேசிய அஜீஸ் ''இரண்டு நாள்களாக எந்த ஆசிரியர்களையும் காணவில்லை.வால்பாறை அரசுப் பள்ளியில் எந்த அடிப்படை வசதிகளும் இல்லை. ஐந்து ஆசிரியர்கள் இருக்க வேண்டிய இடத்தில் ஒரு ஆசிரியர்தான் இருக்கிறார். எம்.எல்.ஏ, எம்.பி என அனைவரிடமும் பேசினேன். யாரும் கண்டுகொள்ளவில்லை. மாதா, பிதா, குரு தெய்வம் என்கின்றனர். குரு எங்கே போனார்? என பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.

இதனிடையே வட்டாரக் கல்வி அதிகாரி வரும்வரை நான் எழுந்து செல்லமாட்டேன் என,அஜீஸ் கோபமாக தெரிவித்தார்.சாலையில் அமர்ந்து அஜீஸ் போராடும் வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.

JACTO GEO STRIKE, TEACHERS STRIKE

OTHER NEWS SHOTS