கேரளாவில் பெய்த மழை, அடித்த வெள்ளத்தில் சிக்கி 14 மாவட்டங்கள் சின்னாபின்னமாகி இருக்கின்றன. ஏறக்குறைய கடந்த 10 நாட்களில் 250-க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வீடுகளை வெள்ளம் சூழ்ந்ததால், நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

 

கடந்த 2 நாட்களாக படிப்படியாக மழை குறைந்த நிலையில் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்கள் மெதுமெதுவாக தங்களின் வீடுகளுக்கு திரும்ப தொடங்கியுள்ளனர்.வீடுகளுக்கு சென்ற அவர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.

வெள்ளம் வடிந்த வீடுகளில் குறைந்தது 2 அடிக்கு மேல் களிமண்ணும் சகதியும் தேங்கி உள்ளது.அதை சுத்தம் செய்ய முயன்ற மக்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.வீடுகளில் உள்ள கழிப்பறைகள், வாஷ்பேஸின், வீடுகளில் உள்ள கப்போர்டுகள், சமையலறை, பாத்திரங்கள், வாஷிங் மெஷின், பீரோக்கள் போன்றவற்றில் கொடிய விஷமுள்ள நாகப்பாம்புகள், ராஜநாகங்கள், கட்டுவிரியன்கள், கண்ணாடி விரியன், ரத்தவிரியன் பாம்புகள் இருப்பதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

 

கடந்த 5 நாட்களில் மட்டும் மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பாம்புக்கடியால் பாதிக்கப்பட்ட மக்கள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதனால் கேரளாவில் பாம்பு பிடிப்பதில் வல்லவரான வாவா சுரேஷின் உதவியை மக்கள் நாடியுள்ளனர். மேலும், பாம்பு பிடிக்கும் பலரையும் வரவழைத்துள்ளனர்.

 

கேரள காடுகளில் அதிகமாக ராஜநாகங்கள், கட்டுவிரியன், நாகப்பாம்பு, கண்ணாடி விரியன் பாம்புகள் இருக்கின்றன. இந்தப் பாம்புகள் வெள்ளத்தில் அடித்து வரப்பட்டு வீடுகளில் தஞ்சமடைந்துள்ளன. இதனால் மாவட்ட நிர்வாகம் மக்கள் வீடுகளை சுத்தம் செய்யும் போது மிகுந்த கவனமுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தி வருகிறது.

BY JENO | AUG 22, 2018 12:27 PM #KERALAFLOOD #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS