'கிரிக்கெட்டில் வாய்ச் சவடாலை மட்டும் வச்சு ஜெயிக்க முடியாது தம்பி'...ஆஸ்திரேலிய வீரர்களுக்கு அட்வைஸ்!

Home > தமிழ் news
By |

திறமை மற்றும் நுணுக்கமான விளையாட்டு மட்டுமே வெற்றி பெற உதவுமே தவிர வெறும் வாய் சொல் அல்ல என ஆஸ்திரேலிய வீரர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்,இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி.

 

ஆஸ்திரேலியாவில் நடக்க உள்ள 3 டி-20, 4 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில்  இந்திய அணி பங்கேற்கிறது.இதில் பங்கேற்கும் இந்திய கேப்டன் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி வீரர்கள் ஆஸ்திரேலியா சென்றுள்ளனர்.ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில்,இதுவரை இந்திய அணியால் கோப்பையை வெல்ல முடியவில்லை.இதனால் கோப்பையை வெல்லும் முனைப்பில் இந்திய அணி விளையாட உள்ளது.

 

இந்நிலையில் வெற்றி பெற ஆஸ்திரேலிய வீரர்களின் வாய்ப்பேச்சு மட்டும் வேலைக்கு ஆகாது என இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.இது குறித்து ரவி சாஸ்திரி அளித்துள்ள பேட்டியில் ‘ஆஸ்திரேலிய வீரர்கள் வெற்றிக்காக மனதளவில் தாக்கத்தை ஏற்படுத்தி, சிந்தனையை திசை திருப்புவதில் கில்லாடிகள்.

 

ஆனால், என்னைப் பொறுத்தவரை தற்போதைய இந்திய வீரர்களிடம் அது வேலைக்கு ஆகாது. திறமையான மற்றும் நுணுக்கமான கிரிக்கெட் தான் ஆஸ்திரேலிய, வீரர்களின் வாய்ப்பேச்சை விட போட்டியில் ஜெயிப்பதற்கு உதவும்',என அவர் தெரிவித்துள்ளார்.

CRICKET, BCCI, RAVI SHASTRI, SLEDGING

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS