'ஒரு தெய்வம் தந்த பூவே'.. வைரமுத்துவின் பாடலை மேடையில் பாடிய சின்மயி!
Home > தமிழ் newsஒருபக்கம் புகார்கள் தெரிவித்தாலும், மறுபக்கம் வைரமுத்து எழுத்தில் உருவான பாடலை சின்மயி பாடியிருக்கிறார்.
கடந்த ஒரு வாரகாலமாக கவிஞர் வைரமுத்து தங்களிடம் தவறாக நடந்து கொண்டார் என ஒருசில பெண்கள் #MeToo ஹேஷ்டேக்கில் ட்வீட் செய்தனர். இதனை பாடகி சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இதுதவிர பாடகி சின்மயியும்,வைரமுத்துவுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை வெளியிட்டு இருந்தார்.
சின்மயியின் குற்றச்சாட்டுக்கு முன்னதாக கவிஞர் வைரமுத்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்து இருந்தார்.தொடர்ந்து நேற்று மீண்டும் ஒரு வீடியோ வெளியிட்டு தன்மீதான குற்றச்சாட்டுகளுக்கு வைரமுத்து பதிலளித்து இருந்தார்.பதிலுக்கு சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தில்,'' மிஸ்டர் வைரமுத்து உண்மை கண்டறியும் சோதனையை மேற்கொள்ள வேண்டும்,'' என தெரிவித்தார்.
இந்தநிலையில் நேற்று சென்னையின் பிரபல மாலில் நடைபெற்ற இசைக்கச்சேரியில் வைரமுத்து எழுத்தில் உருவான 'ஒரு தெய்வம் தந்த பூவே' (கன்னத்தில் முத்தமிட்டால்) பாடலுடன் தனது இசைக்கச்சேரியை சின்மயி தொடங்கினார்.இதனைக்கண்ட ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் ஆரவாரம் செய்தனர்.
இப்பாடலின் வாயிலாக தான் சின்மயி திரைத்துறையில் கால்பதித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- 'அசைக்க முடியாத ஆதாரங்கள் வைத்திருக்கிறேன்'.. வீடியோ வெளியிட்ட வைரமுத்து!
- #MeToo எதிரொலி: ஷூட்டிங்கை பாதியில் நிறுத்தி..நாடு திரும்பிய 'டாப்'நடிகர்!
- 'இயக்குநர் மீது பாலியல் குற்றச்சாட்டு'.. படமே வேணாம் என, விலகிக்கொண்ட பிரபல நடிகர்!
- #MeTooவுக்கு எதிராக உருவான #HimToo.. முற்றுப்புள்ளி வைத்த இளைஞர்!
- சின்மயி உள்ளிட்ட பல பெண்களின் 'பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு' வைரமுத்து பதில்!
- ஆம். பாலியல் ரீதியாக பேசியது உண்மைதான்'.. நீ என்னை மன்னிப்பாயா?
- Author Chetan Bhagat Accused of Sexual Harassment; Issues Apology To Woman & Wife
- ’இந்தியாவின் சிறந்த புத்தகம்’ விருதை பெறும் வைரமுத்துவின் ‘இந்தி’ மொழிபெயர்ப்பு நாவல்!
- ’ஒரு பெயர்.. ஒரு சரித்திரம்..நான்கே எழுத்து’ கண்ணீர் மல்க வைரமுத்து அஞ்சலி!
- “Now the lions are united”: Vairamuthu’s fierce speech