கல்விக்காக ஆபத்தான பயணம்...மனதை உருக்கும் வீடியோ காட்சிகள்!
Home > தமிழ் newsகுழந்தைகளுக்கு கிடைக்கும் அடிப்படைக் கல்வி தான் நாட்டின் வளர்ச்சிக்கும் சமுதாய வளர்ச்சிக்கும் அடிப்படையாக அமைகிறது.இது குழந்தைகளின் எதிர்காலத்தை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.இதனால் வறுமையில் இருக்கும் பெற்றோர்கள் கூட தங்களின் குழந்தைகளை நன்றாக படிக்கவைக்கிறார்கள்.
இந்நிலையில் அசாம் மாநிலம் பிஸ்வநாத் மாவட்டத்திலுள்ள அரசு பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள் ஆற்றைக் கடப்பதற்கு ஆபத்தான பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர்.அவர்கள் ஆற்றை கடக்கும் வீடியோ தற்போது வெளியாகி காண்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஆற்றை கடந்து பள்ளிக்கு வருவதற்கு பாலம் இல்லாததால், சிறிய அளவிலான அலுமினிய அண்டாக்களை தோனி போன்று மாணவ மாணவிகள் பயன்படுத்துகின்றனர். அண்டாவினுள் தன் பள்ளி பையோடு உட்கார்ந்து கொண்டு மாணவர்கள் பயணிப்பது காண்போரின் நெஞ்சை உருக்குவதாக அமைந்துள்ளது.
இத்தனை ஆபத்துகளை கடந்துதான் மாணவர்கள் பள்ளிக்கு வருகிறார்கள் என்று ஆசிரியர்கள் தெரிவிக்கிறார்கள். ஆற்றைக் கடப்பதற்கு வசதியாக உடனடியாக பாலம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பள்ளி மாணவர்களின் ஆபத்து பயணம் தற்போது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- 2-ம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் கொடுக்கக்கூடாது: கண்டிப்புடன் உயர்நீதிமன்றம்!
- ’காலாண்டு விடுமுறையில் பள்ளி மாணவர்களுக்கு’.. செங்கோட்டையன்!
- 14 வயது சிறுவனுக்கு ஆபாச படம் காட்டி துன்புறுத்தி வந்த பள்ளி முதல்வர்!
- School principal shows pornography to minor boy, case filed
- சிறுவர்களுக்கு பாலியல் துன்புறுத்தல்.. மாணவர்கள், கண்டுகொள்ளாத பள்ளி இயக்குனர் கைது!
- Minor boys sexually assaulted at school by seniors
- SHOCKING: 19-Year-Old CBSE Board Exam Topper Allegedly Gang-Raped
- This Differently-Abled Teacher's Dedication Has Won Hearts On The Internet
- ‘பள்ளி விடுமுறை’ என்கிற SMS-ஆல் தற்கொலை.. மதுரை மாணவருக்கு நேர்ந்த சோகம்!
- Once A Naxalite, This Man Has Been Teaching Underprivileged Kids For 30 Years For Free