தனியார் விடுதியின் குளியலறை,படுக்கையறையில் கேமராக்கள்.. ஆப் மூலம் கண்டுபிடித்த பெண்கள்!

Home > தமிழ் news
By |
தனியார் விடுதியின் குளியலறை,படுக்கையறையில் கேமராக்கள்.. ஆப் மூலம் கண்டுபிடித்த பெண்கள்!

தனியார் விடுதி பெண்களின் அந்தரங்க மீறலாக, அவர்களின் அறையில் வைக்கப்பட்ட ரகசிய கேமராக்களை, அப்பெண்கள் செல்போன் செயலி (அப்ளிகேஷன்) மூலம் கண்டுபிடித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

தனியார் விடுதிகளில் தங்கி பணி, கல்லூரி என பல விதமான வாழ்வினை வாழும் பெண்களுக்கு மிக முக்கியமாக பாலியல் பாதுகாப்பு சூழல் அவசியமாகிறது. ஆனால் சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள தில்லை-கங்கா நகர் முதல் தெருவில், இருந்த தனியார் விடுதி ஒன்றை நடத்தி வந்த சஞ்சீவ் என்பவர் அந்த விடுதியில் தங்கியிருந்த சில பெண்களின் அறைகளில், அவ்வப்போது பராமரிப்பு என்கிற பெயரில் நுழைந்து, அவர்களுக்கு தெரியாமல் ஸ்விட்ச் போர்டு போன்ற எலக்ட்ரானிக் சாதனங்களுக்குள் கேமரா வைத்து, அவற்றை படுக்கை அறை, துணிகள் மாட்டுமிடம், குளியல் அறை உள்ளிட்ட பல இடங்களில் வைத்துள்ளார்.


சஞ்சீவ் கண்ணுக்குத் தெரியாத ரகசிய கேமராக்களை பொருத்தியுள்ளதை சந்தேகப்பட்ட பெண்கள், அந்த சந்தேகத்தின் அடிப்படையில், தங்கள் செல்போனில் கேமரா டிடக்டர் அப்ளிகேஷனை டவுன்லோடு செய்து சோதனை செய்துள்ளனர். அதன் மூலம் ஆங்கங்கே பொருத்தப்பட்டிருந்த ரகசிய கேமராக்களை கண்டுபிடித்துள்ளனர்.

 

இதனை அடுத்து விடுதி பெண்கள், அப்பகுதியில் உள்ள ஆதம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், விடுதி உரிமையாளர் சஞ்சீவ் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டார். இந்த விசாரணையில் 2011-ஆம் ஆண்டு முதல் சஞ்சீவ் மீது பல குற்றவியல் வழக்குகள் இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் அவரது 16 செல்போன்கள், போலி ஆவணங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

CELLPHONE, HIDDENCAMERA, ILLEGAL, PRIVACY, CRIME, HOSTEL, WOMENS, LADIESHOSTEL

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS