குழந்தைகள் அரிதானவர்கள். எதிர்கால உலகின் மனிதப் பூக்கள் அவர்களே.  குழந்தைகளை பற்றிய ஆய்வுகளில் அதிர்ச்சி தரக்கூடிய சமீபத்திய முக்கிய அறிவிப்பு ஒன்று உலகத்தோரை உலுக்கியுள்ளது.

 

லாரன்ஸ் சேண்டி என்பவரின் தலைமையில் ஐ.நா-வின் குழந்தைகள் அமைப்பு, ஜெனீவாவின் சுகாதார மையம், ஐ.நா மக்கள் தொகைப் பிரிவு கணக்கீட்டு ஆயம்,  உலக வங்கி இணைந்து  நடத்திய ஆய்வறிக்கை முடிவுகளின்படி,  வருடத்துக்கு ஒருமுறை 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் சுமார் 6.3 மில்லியன் பேர் மிகவும் எளிமையான காரணத்துக்காக உயிரிழக்கின்றனர்.

 

மேலும் இந்த உயிரிழப்புகள் ஆப்பிரிக்காவில் அதிகமாக நிகழ்வதாகவும், ஆசிய கண்டத்தில் 3-ல் ஒரு பங்கு குழந்தைகளும், 5 முதல் 15 வயது வரையிலான குழந்தைகளைப் பொறுத்தவரை, கல்வி மற்றும் பெற்றோர்களின் கவனக்குறைவினாலும் விபத்து மட்டும் நீரில் மூழ்குவது போன்ற காரணங்களால் உயிரிழப்பதாகவும், கிராமப்புற பகுதிகளிலேயே குழந்தைகளின் இறப்பு விகிதம் அதிகமாக உள்ளது.

BY SIVA SANKAR | SEP 19, 2018 1:17 PM #UNO #BABIES #STATISTICS #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS