இந்தியாவை பொறுத்தவரை, இளசுகள்தான் அதிகம் ஆண்ராய்டு பயன்படுத்துபவர்கள் என்று பொதுப்புத்தியில் பலரும் கருதுகின்றனர்.  ஆனால் ஸ்மார்ட்போன்கள் பற்றியா புள்ளிவிவரத்தை ஆய்வு செய்யும் ஸ்டேட்கவுண்டர் என்கிற தளம் ஸ்மார்ட்போன் பயன்பாடுகள் பற்றிய சில உண்மையான புள்ளிவிவரங்களை கூறியுள்ளது. அவை ஸ்மார்ட்போன் பற்றிய நம் முன்முடிவுகளை உடைக்கச் செய்கின்றன.

 

அதன்படி இந்தியாவில் ஆண்ராய்டு மூலம் ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்கள் மொத்தம் 77 சதவீதம்.  இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்கள் 67 சதவீதம் என்றால், இதில் 79 சதவீதமானோர் 60 முதல் 65 வயதுடைய பெரியவர்கள் என்பதுதான் ஆச்சரியமான ரியாலிட்டி.  ஸ்மார்ட்போன் என்றாலே நம்மில் பலருக்கு 15 முதல் 20 வயதுடைய இளசுகள் நினைவுக்கு வருபவர்கள். ஆனால் அவர்களில் 27 சதவீதம் பேர்களே ஸ்மார்ட் போன்களை பயன்படுத்துகிறார்கள் என்பது மேற்கொண்டு இன்னொரு ஆச்சரியமான ரியாலிட்டி.

 

எனினும் ஸ்மார்ட்போன் அப்ளிகேஷன்களில் முதன்மையான ஆப்கள் வாட்ஸ் ஆப் மற்றும் பேஸ்புக். ஒட்டுமொத்தமாக ஸ்மார்ட் போன் பயன்படுத்துபவர்களில் 74 சதவீதம் பேர் வாட்ஸாப்பையும், 45 சதவீதம் பேர் பேஸ்புக்கையும் பயன்படுத்துகின்றனர். இரவு நேரங்களில் தூங்குவதற்கு 15 நிமிடங்களுக்கு முன் 80 % பேர் ஸ்மார்ட் போன் பயன்படுத்துகின்றனர். ஆனால் இதற்கு இளசுகள்தான் என்பதில் சந்தேகம் இல்லை.

BY SIVA SANKAR | SEP 14, 2018 12:28 PM #SMARTPHONE #SMARTPHONESTATISTICS #ANDROID #INDIA #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS