'90'ஸ் கிட்ஸ் ரெடியா இருங்க...உங்க 'பேவரேட் கிரிக்கெட் எதிரி' திரும்ப வராரு...வைரலாகும் வீடியோ!

Home > News Shots > தமிழ் news
By |

'இன்று உள்ள குழந்தைகளுக்கு கிரிக்கெட் பற்றி நிறைய தெரியும் என்று நினைக்கிறீர்களா?இல்லை உண்மையான வேகப்பந்து வீச்சு என்றால் என்ன என்று நான் வந்து காட்டுகிறேன்' என வீடியோ வெளியிட்டு அனைவருக்கும் எதிர்பார்ப்பை கூட்டி இருக்கிறார்,பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சோயிப் அக்தர்.

கிரிக்கெட் உலகில் ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ் என்று அழைக்கப்படும் சோயிப் அக்தரின் பந்தை எதிர்கொள்ள பயந்த சில வீரர்கழும் உண்டு.ஆனால் அவர் வீசும் ஓவரிலேயே ரன் மழை பொழிந்தவர் இந்திய கிரிக்கெட்டின் கடவுள் சச்சின்.அது தனி கதை.இந்தநிலையில்  "இன்று உள்ள குழந்தைகளுக்கு கிரிக்கெட் பற்றி நிறைய தெரியும் என்று நினைக்கிறார்கள். அதனால் நான் திரும்ப வந்து உண்மையான வேகப்பந்து வீச்சு என்றால் என்ன என்று காட்டுகிறேன். எச்சரிக்கையாக இருங்கள். பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் இணைகிறேன்" என்று ட்விட் செய்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார் அக்தர்.

இதுகுறித்து அவர் பேசிய வீடியோவினை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.ரசிகர்கள் பலரும் ஆர்வமாக ரீ-ட்விட் செய்து வருகின்றனர். இதனிடையே பிப்ரவரி 14 துவங்கவுள்ள பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் உள்ள ஆறு அணிகளில் ஒரு அணியில் அக்தர் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2011 உலகக் கோப்பைக்கு பின் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற அக்தர்,கிரிக்கெட் வர்ணனையாளராக தனது புது இன்னிங்க்ஸை தொடர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

CRICKET, PAKISTAN, SHOAIB AKHTAR, RAWALPINDI EXPRESS

OTHER NEWS SHOTS

RELATED NEWS STORIES