Watch Video:'17 பந்தில் 59 ரன்கள்'.. மீண்டும் பார்முக்குத் திரும்பிய மூத்த வீரர்!

Home > தமிழ் news
By |

டி10 போட்டித்தொடரில் 17 பந்தில் 59 ரன்கள் குவித்து அதிரடி காட்டினார்,பாகிஸ்தானின் முன்னாள் வீரர் ஷகித் அப்ரிடி.

 

பாகிஸ்தானில் நடந்து வரும் டி10 போட்டித்தொடரில் இறுதிப்போட்டிக்கு தகுதிபெறும் போட்டியில் நார்தன் வாரியர்ஸ் மற்றும் பக்தோன்ஸ் அணிகள் மோதின.இந்த போட்டியில் பக்தோன்ஸ் அணிக்காக களமிறங்கிய பாகிஸ்தானின் முன்னாள் வீரர் ஷகித் அப்ரிடி 7 சிக்சர்களுடன் 17 பந்தில் 59 ரன்கள் குவித்து அசத்தினார். பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் வஹாப் ரியாஸின் பந்தில் ஓவரில் 4 பந்தில் 4 சிக்ஸர் அடித்து அதிரடி காட்டினார்.

 

அப்ரிடியின் அசத்தலான ஆட்டத்தால் பக்தோன்ஸ் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் நார்தன் வாரியர்ஸை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. தோல்வியுற்ற வாரியர்ஸ் அணி,எலிமினேட்டர் போட்டியில் மராத்தா ரேபியன்ஸை வீழ்த்தியதால் மீண்டும் வாரியர்ஸ் மற்றும் பக்தோன்ஸ் அணிகள் இறுதிப்போட்டியில் மோதவுள்ளன.

PAKISTAN, SHAHID AFRIDI, PAKHTOONS, NORTHERN WARRIORS, T10 LEAGUE

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS