'யுடியூப்பில் சேனல் ஆரம்பிச்சா இவ்வளவு வருமானமா'?தலைசுற்ற வைக்கும் 7வயது சிறுவனின் வருமானம்!

Home > தமிழ் news
By |

யுடியூப்பில் சேனல் ஆரம்பித்த ஏழு வயது சிறுவனின் வருமானம் உலகையே திரும்பி பார்க்க வைத்திருக்கிறது.

 

இன்றைய தலைமுறையை சேர்ந்த இளைஞர்கள் பலர் யுடியூப்பில் சேனல் ஆரம்பித்து,அதில் பல வகையான வீடியோகளை பதிவிட்டு வருகிறார்கள்.அந்த வகையில் காமெடிக்கு என்று சில ‘வி ப்ளாக்ஸ்’, சமையலுக்கு என்று சில ‘வி பளாக்ஸ்’ என பலதரப்பட்ட வீடியோக்கள் பதிவிடப்படுகிறது.

 

இந்நிலையில் ரையான் என்ற சிறுவன் அவன் தந்தையுடன் சேர்ந்து ஆரம்பித்த யுடியூப் சேனல் இன்றைக்கு 22 மில்லியன் டாலர்களை மிகச் சர்வ சாதாரணமாக சம்பாதித்து வருகிறது. இந்திய மதிப்பில் ஏறக்குறையை 155 கோடிக்கு மேல்.அந்தளவுக்கு வருமானத்தை குவிக்கும் அளவிற்கு அந்த சேனலில் என்ன இருக்கிறது என நீங்கள் கேக்கலாம்.

 

சிறுவனான ரையான், குழந்தைகளை ஈர்க்கும் வகையில் அவர்கள் விரும்பும் விளையாட்டு பொம்மைகளை பற்றிய புதுப்புது தகவல்களை செய்முறையோடு செய்து காட்ட ஆரம்பித்தான். தங்களின் பிள்ளைக்கு ஏதாவது ஒரு விளையாட்டு பொருள்  வாங்க வேண்டும் என்றால் உடனே ரையானின் சேனலை தேடிப்பிடித்து பார்க்க ஆரம்பித்தனர் பார்வையாளர்கள். அவனது விமர்சனம் அவர்களுக்குப் பிடித்து போய்விட்டது. கூடவே அவன் தரும் டிப்ஸும் பிடித்து போனது.இதனால் ஃபாலோவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமானது.

 

இதுவரை அவனது சேனலுக்கு 17 மில்லியன் சந்தாதாரகள். அதாவது 17,319,610 ஃபாலோவர்கள் இருக்கிறார்கள். 26 பில்லியன் பேர் இவனது வீடியோவை பார்த்திருக்கிறார்கள். இதன் காரணமாக ஏராளமான கம்பெனிகள் ரையானின் சேனலுக்கு விளம்பரத்தை வாரி வழங்கி வருகிறார்கள்.

 

சாதிப்பதற்கு வயது தடையில்லை என்பதை ரையான் தினமும் நிரூபித்து வருகிறான்.

YOUTUBE, RYAN TOYSREVIEW, $22 MILLION

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS