புனேவில் உள்ள ஒரு கான்வெண்ட் பள்ளியில் 14 வயது சிறுவனுக்கு ஆபாச படங்களை காண்பித்து சிறுவனை பாலியல் ரீதியாக துன்புறுத்திய பள்ளி முதல்வர் கைது செய்யப்பட்டுள்ளது கல்வி நிலையங்களிடையே மட்டுமன்றி பெற்றோர்களிடம் பெருத்த அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.

 

பெற்றோர்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதற்கான முதல் காரணமே ஒழுக்கக் கட்டுப்பாடு மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு மீதான உறுதித்தன்மையும்தான். அதற்கு அவநம்பிக்கையை உண்டாக்கி பெற்றோர்களை அதிர்ச்சி அடைய  வைத்துள்ள புனே தனியார் பள்ளி முதல்வர், 14 வயதேயான சிறுவனுக்கு தொடர்ந்து ஆபாச படங்களை காண்பித்து, பாலுறவுக்கு உட்படுத்தி சிறுவனை துன்புறுத்தியுள்ளார்.

 

சிறுவனோ தனக்கு நேர்ந்த கொடுமையை, அதே பள்ளியை சேர்ந்த மாணவர் ஆலோசகராக இருந்த பெண்மணியிடம் கூறியுள்ளான். ஆனால் அதை அறிந்த அந்த பெண்மணி, மாணவர்களின் நலனை காக்க வேண்டிய இடத்தில் இருந்து யோசிக்காமல், எங்கே நிர்வாகத்துக்கும் பள்ளி முதல்வருக்கும் எதிராக பேசினால் தன் வேலை பறிபோய்விடுமோ என்று எண்ணி, எல்லாவற்றையு  மறைத்துவிட்டு, சிறுவனிடம் இந்த விஷயத்தை அப்படியே விட்டுவிடச் சொல்லியும் அமைதி காக்கச் சொல்லியும் அறிவுறுத்தியுள்ளார்.

 

ஆனால் சிறுவனின் பெற்றோர்களும், படிப்பு பாதிக்கப்பட்டுவிடும் என பயந்து தகவல் சொல்லாமல் இருந்த நிலையில், காவல்துறையினர் எப்படியோ மோப்பம் பிடித்து தகவலை கண்டுபிடித்து, பள்ளி முதல்வரையும், அவரை காட்டிக் கொடுக்காத பெண் ஆலோசகரையும் கைது செய்துள்ளனர்.  கல்வி நிலையங்களே இத்தகைய பாதுகாப்பற்ற சூழலை உருவாக்கினால் மாணவர்களின் நிலை என்னவாகும் என்கிற அச்சத்தை இதுபோன்ற சம்பவங்கள் பெற்றோர்களுக்கு ஏற்படுத்துகின்றன.

BY SIVA SANKAR | SEP 17, 2018 7:57 PM #SEXUALABUSE #SCHOOLSTUDENT #PRINCIPAL #PUNE #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS