மதுரையில் விளையாட்டாக, ‘இன்று பள்ளி விடுமுறை’ என எஸ்.எம்.எஸ் அனுப்பியதால் மதுரையில் ஒன்பதாம் வகுப்பு மாணவர்,  தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

தனது நண்பர்கள் பலருக்கும், விளையாட்டாக பள்ளி விடுமுறை என்று அந்த மாணவர் மெசேஜ் அனுப்பியிருக்கிறார். இதனால் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் பள்ளிக்கு வராததை அடுத்து, மாணவனின் விளையாட்டான செயல் வினையானது.

 

இதனை அறிந்த நகராட்சி பள்ளி நிர்வாகம் அந்த மாணவரின் வீட்டுக்கு போன் செய்து விபரத்தை கூறியுள்ளது. எனவே உண்மை அறிந்த பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பயந்து, தான் செய்த தவறுக்கும் பயந்து அந்த ஒன்பதாம் வகுப்பு மாணவர் தற்கொலை செய்துகொண்டதாக , இவ்வழக்கை விசாரித்த காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

BY SIVA SANKAR | SEP 11, 2018 8:01 PM #SCHOOLSTUDENT #SUICIDE #MADURAI #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS