சபரிமலை விவகாரம்: யூ டர்ன் அடித்த தேவசம்போர்டு.. தீர்ப்பை தள்ளிவைத்த கோர்ட்!

Home > தமிழ் news
By |

சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் கோவிலுக்குள் அனுமதிப்பதற்கான தடையை கடந்த வருடம் நீக்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

பெரும் பரபரப்பை கிளப்பிய இந்த தீர்ப்புக்கு பிறகு கம்யூனிஸ்ட்டுகளின் பேராதரவுடன் ஆட்சியமைத்து இயங்கி வரும் கேரளாவில் அனைத்து வயது பெண்களையும் கோவிலுக்குள் அனுப்புவதற்கான ஆதரவும் எதிர்ப்பும் ஒருசேர கிளம்பியது. அந்த சமயத்தில் அனைத்து வயது பெண்களும் கோவிலுக்குள் நுழைவது  குறித்து ஆலோசித்த சபரிமலை தேவசம்போர்டு, உச்சநீதிமன்ற உத்தரவை ஏற்க மறுத்து பெண்களை அனுமதிக்க ஆட்சேபனை தெரிவித்தது. எனினும் அதன் பிறகு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள் என பல பெண்கள் சபரிமலை கோவிலுக்குள் செல்ல முற்பட்டனர்.

சிலர் வெற்றிகரமாக சென்றும் வந்தனர். ஆனால் முதற்கட்ட பிரச்சனையின்போது பந்தள மன்னர் சபரிமலை சந்நிதானத்தை பெண்கள் அடைந்தால், கதவை இழுத்து மூட உத்தரவிட்டதால், பெண்கள் பின் வாங்கினர். அதன் பிறகு சமய அமைப்புகளைச் சேர்ந்த பலரும் போராட்டம், ஆர்ப்பாட்டம் மற்றும் வன்முறைகளில் குதித்தனர். போலீஸார் குவிந்தனர். ஆர்ப்பாட்டங்கள் செய்வோரை கைது செய்து குவித்தனர்.

பிறகு கொஞ்ச நாள் இந்த விவகாரம் ஓய்ந்திருந்த நிலையில், தேவசம்போர்ட் முடிவில் ஒரு அதிரடி மாற்றம் ஏற்பட்டுள்ளது. அனைத்து வயது பெண்களையும் சபரிமலை கோவிலுக்குள் சென்று ஐயப்பனை தரிசிக்க அனுமதிக்கலாம் என தேவசம்போர்ட் ஆதரவு தெரிவித்ததை அடுத்து, சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து ஏற்கனவே தொடுக்கப்பட்டு, இன்று விசாரணைக்கு வந்த வழக்கின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS