Watch Video: தொடர்ந்து டாஸில் தோற்றதால்.. கேப்டன் செய்த வேலையைப் பாருங்க!

Home > தமிழ் news
By |
Watch Video: தொடர்ந்து டாஸில் தோற்றதால்.. கேப்டன் செய்த வேலையைப் பாருங்க!

தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டுபிளஸிஸ் தொடர்ந்து 6 முறை இதுவரை டாஸை இழந்துள்ளார்.இதைத் தொடர்ந்து அவர் செய்த செயல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் டு பிளசிஸ் தன்னுடன் ஜே.பி.டுமினியை அழைத்து வந்த அவர் டாஸ் போடுகையில் காயினை அவரிடம் கொடுத்தார்.பின்னர் வேறு திசையில் டு பிளசிஸ் திரும்பிக் கொண்டார்.இதில் டு பிளஸ்ஸின் பிளான் வெல்ல,தென் ஆப்பிரிக்கா ஒருவழியாக டாஸ் ஜெயித்தது.

 

இந்த வீடியோவை டு பிளசிஸ் இணையத்தில் பகிர தற்போது அது வைரலாகி வருகிறது.இதுகுறித்து அவர்,''ஒரு கேப்டனாக எனது பலம் மட்டுமல்ல பலவீனத்தையும் தெரிந்து கொள்வது அவசியம் அதனால் டுமினியை உடன் அழைத்து வந்தேன்.விளையாட்டாக சில விஷயங்கள் செய்வது எனக்குப் பிடிக்கும். அதுவும் டி 20 போட்டிகளில்,'' என தெரிவித்துள்ளார்.

CRICKET, DUPLESSIS, SOUTHAFRICA

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS