அடுத்த 4 போட்டிகளில் விளையாட கேப்டனுக்கு தடை; மாறும் புதிய கேப்டன்.. ஐசிசி அதிரடி!

Home > தமிழ் news
By |

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் அண்டின் பெலுக்வாயோவை பார்த்து நிறவெறி தூண்டும் வகையில் பேசிய பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் சர்ஃப்ரஸ் அஹமதுதான் கடந்த வார சர்ச்சைகளின் உச்சநாயகனாக இருந்தார்.

தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பாகிஸ்தான் விளையாடி வரும் நிலையில், தென்னாப்ரிக்காவுக்கு எதிராக பாகிஸ்தான் விளையாண்ட 2-வது ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் பெலுக்வாயோவை பார்த்து நிறவெறி தூண்டும் வகையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் சர்ஃப்ரஸ் அஹமது பேசியது அங்கிருந்த ஸ்டெம்ப் மைக்கில் பதிவாகியது.

இதனை அங்கிருந்த ரெஃப்ரி ரஞ்சன் மடுகலே ஐசிசி ஒழுங்குமுறை கமிட்டியின் பார்வைக்கு எடுத்துச் சென்றதை அடுத்து இந்த விஷயத்தை பற்றி ஐசிசி ரெகுலேஷன் விசாரிக்கத் தொடங்கியது. இதனிடையே பெலுக்வாயோவை சந்தித்து தனிப்பட்ட முறையில் ஐசிசி முக்கிய தலைவர்களின் முன்னிலையில் சர்ஃப்ரஸ் மன்னிப்பு கோரினார். இதுபற்றி பேசிய தென்னாப்பிரிக்க கேப்டன் டூ பிளீசிஸும் சர்ஃப்ரஸை மன்னித்து பொதுவாக ஒரு எச்சரிக்கையையும் விடுத்தார்.

இந்நிலையில் சர்ஃப்ரஸின் இந்த நடத்தையை முழுமையாக விசாரித்த ஐசிசி,  இனவெறி தூண்டும் வகையில் பேசிய சர்ஃபரஸ் அஹமதுவுக்கு, தொடர்ந்து அடுத்து பாகிஸ்தான் அணி தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக விளையாடவேண்டிய கடைசி 2 ஒருநாள் மற்றும் இரண்டு டி20 போட்டிகள் உள்ளிட்ட  4 போட்டிகளில் விளையாடுவதற்கு தடை விதித்தது.

மேலும் ஐசிசியின் நிபந்தனைகளுக்குட்பட்டு  ஒழுங்குமுறையாக நடந்துகொள்வதற்கான பயிற்சி வகுப்பில் கலந்துகொள்வதற்கும் பாகிஸ்தான் கேப்டன் சர்ஃப்ரஸ் அஹமது அறிவுறுத்தப்பட்டுள்ளார். இதனையடுத்து பாகிஸ்தான் அணியின் கேப்டனாக சோயப் மாலிக் பொறுப்பேற்று விளையாடுகிறார். 

ICC, PHEHLUKWAYO, SARFRAZAHMED, SAVPAK, SHOAIB MALIK

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS