ஸ்மார்ட்போன் உலகத்தில் புத்தம் புதியவைகளை சந்தைகளில் களமிறக்கும் உத்தியைத் திறம்படச் செய்யும் நிறுவனங்களில் ஒன்றாக திகழ்வது,  சாம்சங் நிறுவனம்.

 

டிஜிட்டல் யுகத்தில் புதிய பாதையினை நோக்கி ஸ்மார்ட் போன்  உலகத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும்  வகையில்,  அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய சாம்சங் ஃபோல்டிங் ரக மொபைலை அறிமுகப்படுத்தவுள்ளது. எனினும் அடுத்த ஆண்டுக்குள் சந்தைகளில் இந்த மொபைல் வரவிருப்பது சந்தேகம்தான்.  கடந்த ஏப்ரல் மாதத்தின் தொடக்கத்தில் இந்த மொபைலின் மாதிரி அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது.

 

முழுமையான ஸ்கிரீனும், 7 இஞ்ச் அளவும் கொண்ட இந்த மொபைலை மடித்து வைக்க முடியும்.  இந்த ஸ்மார்ட்போன் வடிவமைப்புக்கு நிகராக மைக்ரோசாஃப்ட், எல்.ஜி உள்ளிட்ட இன்னும் சில நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

BY SIVA SANKAR | SEP 5, 2018 5:25 PM #SMARTPHONE #SAMSUNG #FOLDABLEMOBILES #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS