சமீப காலமாக பெருகி வரும் விபத்துக்கள் பெருத்த அச்சத்தை உண்டாக்கியுள்ளது. ஏற்கனவே விபத்து நிகழும் நாடுகளில் இந்தியா முதன்மையான இடங்களில் உள்ளது ஒரு அதிர்ச்சியான புள்ளி விவரம். அண்மையில் நடந்த சேலம் விபத்து, தெலுங்கானா விபத்துக்கள் பலரையும் இழக்கச் செய்தது.
இதேபோல் தற்போது நேர்ந்துள்ள சேலம் ஓமலூரில் ஏற்பட்ட கார் விபத்தில் நிகழ்ந்த பெரும் சோகம், பலரையும் கண்கலங்கச் செய்தது. விபத்து நடந்தேறியவுடன், விபத்துக்குள்ளானவரை அங்கு அருகில் இருந்த அரசு மருத்துவமனைக்குக் கொண்டுவந்துள்ளனர். உடனடியாக செவிலியர்கள் கூடி, விபத்துக்குள்ளான நபருக்கு முதலதவி சிகிச்சையை அளிக்கத் தயாராகினர். அதில் ஒரு செவிலியர்தான், சிவகாமி.
விபத்துக்குள்ளானவரின் தலையில் அடிபட்டதால் முகம் முழுவதும் ரத்தம் சூழ்ந்திருந்தது. அதை முதலில் சுத்தம் செய்யும்பொருட்டு சிவகாமி ரத்தக்கறையை அகற்றிக்கொண்டிருந்தார். அகற்ற அகற்ற, சிவகாமி முழுசுய நினைவுக்கு வருகிறார். அப்போதுதான் தான் ரத்தக் கறையை அகற்றிக்கொண்டிருப்பது தன் கணவர்தான் என்று அறிகிறார்.
ஆனால் அதற்குள் அந்த நபர் இறந்துவிட்டார் என தெரியவும், சிகிச்சை அளிக்க முற்பட்டது தன் கணவர், விபத்துக்குள்ளானது தன் கணவர், இறந்தது தன் கணவர் என்று ஒரு சேர அறிந்ததும் அதிர்ச்சியாகிறார். அடுத்த நொடி அவருக்கு அழுகை பீறிட்டு வரவும் அருகில் இருந்த செவிலியர்கள் அவரை பிடித்துக்கொண்டு தேற்றினர். இறந்துபோன அந்த கணவர் சீனிவாசனுக்கும், செவிலியர் சிவகாமிக்கும் 12 வயது மதிக்கத்தக்க மகள் இருக்கிறார்.
RELATED NEWS SHOTS
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- HORRIFIC | Woman Sexually Abused By Doctors While Undergoing Heart Surgery
- Watch Video: சுங்கச் சாவடி மீது மோதிய லாரி...சாலையில் ஆறாக ஓடிய பீர்!
- IndiGo Airlines Bus With 50 Passengers Catches Fire At Chennai Airport
- ‘அடுத்த இலக்கு இதுதான்’.. ‘அர்ஜூனா விருது’ பெற்ற தமிழக வீரர்!
- 8 வழிச்சாலை திட்டத்துக்கு அனுமதி உண்டா? உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு!
- ’காலாண்டு விடுமுறையில் பள்ளி மாணவர்களுக்கு’.. செங்கோட்டையன்!
- "Reduced To Bones": Woman Held Captive By Brother For 2 Years, Given A Piece Of Bread Every 4 Days
- 'Miracle' Baby With Four Legs & Two Penises Leaves Doctors Baffled
- ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் தற்கொலையில் திருப்பம்!
- Policeman Carries Pregnant Woman To Hospital After Ambulance Fails To Reach On Time