‘4 மாச கர்ப்பிணி மனைவிகிட்ட, இத எப்படி சொல்றது?’.. கலங்கும் தமிழக குடும்பம்!

Home > News Shots > தமிழ் news
By |

தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய ராணுவ வீரர் சிவசந்திரன் நேற்று நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பலியாகியுள்ளார். இந்த நிலையில் அவர் இறந்த தகவலை, எப்படி அவருடைய கர்ப்பிணி மனைவியிடம் சொல்வது என அவர்கள் உறவினர் திணறிவருவது தமிழ்நாட்டை சோகத்தில் மூழ்கடித்துள்ளது.

ஜம்மூ காஷ்மீரில் நேற்று நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு 44 இந்திய துணை ராணுவ வீரர்கள் பலியாகியுள்ளனர். இந்த தாக்குதலுக்கு பல அரசியல் தலைவர்களும், கிரிக்கெட் வீரர்களும், பொதுமக்களும் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் பதட்டமான இந்த சூழலில் ஸ்ரீநகரைச் சேர்ந்த சிலர் புல்வாமா தாக்குதல் வெற்றி பெற்றதை பட்டாசு வெடித்து கொண்டாடி அதனை வீடியோ எடுத்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர்.

இதனையடுத்து தற்போது தாக்குதலுக்கு பலியானவர்களில் சிவசந்திரன், சுப்பிரமணியன் ஆகிய இருவரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் அரியலூரைச் சேர்ந்த சிவசந்திரனின் இறப்பு செய்தி முதலில் அவரது மனைவி காந்திமதிக்கு தெரியப்படுத்தப்படவில்லை.

இதுகுறித்து அவர்களின் உறவினரிடம் கேட்டபோது, சிவசந்திரனின் மனைவி 4 மாத கர்ப்பிணியாக இருக்கிறார். இந்த நிலையில் அவரிடம் எப்படி இந்த தகவலை சொல்வது என்று கண்ணீர் வடித்துள்ள செய்தி பலரையும் உலுக்கியுள்ளது. சிவசந்திரன் – காந்திமதி தம்பதியருக்கு 2 வயது மகன் ஒருவர் இருப்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் கோவில்பட்டியைச் சேர்ந்த ராணுவ வீரர் சுப்ரமணியன் என்பவரும் இந்த தாக்குதலில் பலியாகியுள்ள நிலையில், இரண்டு வீரர்களின் குடும்பத்துக்கும் தலா 20 லட்ச ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

PULWAMAATTACK, ARIYALUR, SAD

OTHER NEWS SHOTS

RELATED NEWS STORIES