2,300 போலீஸைப் போல நாங்களும் முன்னெச்சரிக்கையுடன் இருக்கிறோம்: தர்மசேனா தலைவர் பகீர்!

Home > தமிழ் news
By |

கடந்த சில வாரங்களுக்கு முன்பு சபரிமலை சன்னிதானத்துக்குள் பெண்கள் நுழைய முடியாததை அடுத்து பெண் பத்திரிகையாளர் ஒருவரும், சமூக செயற்பாட்டாளர் ஒருவரும் நுழைய முற்பட்டதனால் பெரும் போராட்டங்களும் கலவரங்களும் சபரிமலையில் உண்டாகின. 

 

கேரள முதல்வர் பினராய் விஜயனோ, சங் பரிவார் மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளை குற்றம் சாட்டினார். இந்த நிலையில் மீண்டும் சபரிமலை சன்னிதானம் இன்று திறக்கப்படுகிறது. இதனையடுத்து 50 வயதுக்கு மேற்பட்ட 15 பெண் பாதுகாப்பு படையினர் உட்பட 2,300 போலீசாரின் பலத்த பாதுகாப்புடனும், 20 கமாண்டோ வீரர்களும், மற்ற 100 பெண் போலீசாரும் நிறுத்தப்பட்டுள்ள நிலையில்,  நவம்பர் 5-ம் தேதி மாலை 5 மணிக்கு தொடங்கி, நவம்பர் 6 தீபாவளி அன்று இரவு 10 மணி வரை பூஜை நடக்கிறது. 

 

முன்னதாக சபரிமலா கர்மா சமிதி என்கிற வலதுசாரி அமைப்பு, ஊடகங்களுக்கு ‘பெண் செய்தியாளர்களை சபரிமலைக்கு அனுப்ப வேண்டாம்' என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டதாக செய்திகள் வந்தன. ஆனால் இதுபற்றி கேரள டிஜிபி கூறும்போது, லோக்நாத் பெஹ்ரா இந்த தகவல்கள் பொய்யானவை என்று  மறுத்துள்ளார். 


எனினும் ஐயப்பா தர்மா சேனாவின் தலைவர் மற்றும் பிரபல வலதுசாரி செயற்பாட்டாளரான ராகுல் ஈஷ்வர்,  சென்ற முறை சபரிமலை கலவரத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட 3700 பேர்களுள் ஒருவராவார். தற்போது பிணையில் வெளிவந்த இவர், போலீஸைப் போல தாங்களும் முழு முன்னெச்சரிக்கையுடன்தான் இருக்கிறோம் என்று பகிரங்கமாக கருத்து தெரிவித்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS