சபரிமலை வழக்கு: பாஜக இளைஞர்கள்மீது தண்ணீர் பாய்ச்சிய காவலர்கள்!

Home > தமிழ் news
By |

கேரளாவில் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த, இளைஞர் அணியினர் ஆர்ப்பாட்டம் செய்ததை அடுத்து, அவர்களின் மீது போலீசார் தண்ணீர் பாய்ச்சி அடித்து விரட்டியதால் போராட்டக் களம் மேலும் கலவரமாக மாறியது.

 

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பெண்கள் செல்வதற்கு இருந்த தடையை சட்டப்பிரிவு 21 மற்றும் 25களின் கீழ், நீக்கியது சமீபத்திய உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு. இந்த தீர்ப்பின்படி, அனைத்து வயது பெண்களும் சபரிமலை கோவிலுக்குள் அனுமதிக்கப்படலா என்று உத்தரவிட்டதன்பேரில், சபரிமலை தேவசம் அமைச்சகம் அதற்கான ஏற்பாடுகளை கவனித்து வந்தது.


இந்நிலையில் இந்த தீர்ப்புக்கு ஆதரவுக்கருத்துக்கள் வந்ததுபோலவே எதிர்ப்புக் கருத்துக்களும் வலுத்தன.  இதில் கேரள பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த இளைஞர் படையினர் சிலர், பெண்கள் கோவிலுக்குள் செல்லும் ஏற்பாடுகளை கவனிக்கும் சபரிமலை தேவசம் மினிஸ்டர் கடகாம்பள்ளி சுரேந்திரனின் இருப்பிடத்திற்கு சென்று போராட்டம் செய்தனர். கட்டுக்குள் அடங்காத போராட்டத்தை சமநிலைப்படுத்த போலீசார் தண்ணீர் பாய்ச்சியடிக்கத் தொடங்கினர். இதனையடுத்து மேலும் சில நேரம் அவ்விடத்தில் நீண்ட நேரம் வன்முறைக்கலவரம் நீடித்தது.

 

BJP, SABARIMALATEMPLE, SABARIMALAVERDICT, PROTEST, KERALA, SUPREMECOURT

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS