டோமினோஸ் பீட்சா என்றால் பலருக்கும் அலாதி  பிரியம்.  தனது ரசிகர்களுக்கான புதிய கோணத்தில் யோசித்து விதவிதமாக பீட்சாவில் புதுமைகளை செய்வது போலவே, ஒரு புதிய கோணத்தில் பீட்சா கோல்ட் விளையாட்டையும் கடந்த வாரம் ரஷ்யாவின் டோமினோஸ் பீட்சா முன்வைத்திருந்தது. அதன்படி, டோமினோஸ் பீஸாவின் உண்மை விசுவாசிகளாக இருப்பவர்கள் அதை நிரூபிக்கும் வகையில் தங்கள் உடல் பாகங்களில் டோமினோஸ் சம்மந்தப்பட்ட லோகோக்களை டாட்டூக்களாக குத்திக்கொள்ள வேண்டும்.

 

அவ்வாறு குத்திக்கொள்ளும் டாட்டூக்களை உடலின் வெளிப்புற பாகங்களான, கால்பாதம், கைகள், முகம், கழுத்து என எளிதில் வெளியில் தெரியும் பாகங்களாக  இருக்க வேண்டும் என்பதே நிபந்தனை. மேலும் இதனை செய்துகொண்டு அவற்றை புகைப்படம் எடுத்து டோமினோஸ் பீட்சா ரஷ்யா என்கிற ஹேஷ்டேகில் டோமினோஸின் அலுவல் இணையம், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்டவற்றில் பகிரவேண்டும்.

 

அப்படி பகிருபவர்களில் முதல் 350 பேருக்கு டோமினோஸ் தரும் அதிசய பரிசு என்ன தெரியுமா? டோமினோஸ் பீட்சா சார்பில் வெற்றி பெற்றவர்களுக்கான சான்றிதழையும், அவர்களுக்கு வருடத்துக்கு 100 பீட்சா வீதம், 100 வருடம் தொடர்ந்து இலவச பீட்சா வழங்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

ஒருவேளை 100 வருடங்கள் வாழ சாத்தியமிருப்பவர்களுக்கு இது அமோகமான ஆஃபர்தான். கணக்குப்படி மொத்தம் அவர்களுக்கு 10 ஆயிரம் பீட்சா கிடைக்கும். ஆக, இந்த ஆஃபருகாக பலரும் டாட்டூக்களை குத்திக்கொண்டிருக்கின்றனர். வரும் அக்டோபர் 31ம் தேதி அன்று  வெற்றியாளர்களுக்கு இந்த அமோகமான ஆஃபரை பரிசாக தரவிருக்கிறதாம் ரஷ்யாவின் டோமினோஸ் பீட்சா.

BY SIVA SANKAR | SEP 10, 2018 7:43 PM #DOMINOSPIZZARUSSIA #PIZZA #DOMINOS #FREEPIZZAFOR100YEARS #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS