ஆக.29; சென்னை: இந்தியாவின் பலதரப்பட்ட மாநிலங்களில் தகவல் தொடர்புத் துறையின் வளர்ச்சி இலக்கை கணக்கில் கொண்டு, ஸ்மார்ட் சிட்டி புரோஜக்டுகள் நிறுவப்பட்டு வருகின்றன. அதில் முக்கியமாக டெல்லி, கல்கத்தா, மும்பை, சென்னை போன்ற மெட்ரோ சிட்டிகள் அடங்குகின்றன.


பெங்களூரு ஏற்கனவே ஹைஃபையான சிட்டியாக இருக்கும் நிலையில், மற்ற மாநில தலைநகரங்களாகவும் மாநகரங்களாகவும் விளங்கும் மெட்ரோ சிட்டிக்களை ஸ்மார்ட் சிட்டிகளாக மாற்றுவதற்கு பல கோடிகள் செலவிடப்படுகின்றன. அப்படியான செலவில் சமீபத்தில் டெல்லி எங்கும் இண்டர்நெட், வைஃபை போன்ற வசதிகளுடன் கூடிய ஸ்மார்ட் சிட்டியாக  மாற்றப்பட்டு வருகிறது.  அங்கு அந்த திட்டம் செயல்படுத்தப்படவும் தொடங்கியது.

 

இந்நிலையில், தமிழகத்தில் ரூ.100 கோடி மதிப்பு ஸ்மார்ட் சிட்டி டெண்டருக்கு உயர்நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் 10 நகரங்களில் மின்னணு நிர்வாகத்தினை ஏற்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான மின்னனு நிர்வாக திட்ட வடிவமைப்புக்கான மதிப்பீட்டுத் தொகையினை கணக்கிட்டு, குறைந்தபட்சமாக  ரூ.100 கோடிக்கு அரசு டெண்டர் விட்டிருந்தது. இச்சமயத்தில்தான் ரூ.100 கோடி மதிப்பு ஸ்மார்ட் சிட்டி டெண்டருக்கு உயர்நீதிமன்றம் தடைவிதித்து தற்காலிகமாக  உத்தரவிட்டுள்ளது.

BY SIVA SANKAR | AUG 29, 2018 12:00 PM #MADRASHIGHCOURT #SMARTCITYPROJECT #CHENNAI #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS