'இவர் பெரிய ஹோட்டல்களுக்கே டப் கொடுப்பார் போல'...'பாகிஸ்தான் ஒழிக'...மட்டும் சொன்னா போதும்!

Home > News Shots > தமிழ் news
By |

புல்வாமாவில் கடந்த பிப்.14-ம் தேதி ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தை சேர்ந்த தீவிரவாதிகள் நடத்திய கோழைத்தனமான தாக்குதலில்,40 சிஆர்பிஎப் வீரர்கள் வீரமரணம் அடைந்தார்கள்.நாடு முழுவதும் கண்டன குரல்கள் எழுந்த நிலையில்,பாதிக்கப்பட்ட வீரர்களின் குடும்பங்களுக்கு பலரும் தங்களால் முடிந்த உதவியினை செய்து வருகிறார்கள்.

அந்த வகையில்  பாகிஸ்தானுக்கு தனது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில்,சட்டீஸ்கர் மாநிலம் ஜெக்தல்பூரில் உள்ள உணவுக் கடை உரிமையாளர் நூதனமான தள்ளுபடியை அறிவித்துள்ளார்.அதன்படி அவரது கடைக்கு வரும் வாடிக்கையாளர்களில் பாகிஸ்தான் ஒழிக என்று கூறுபவர்களுக்கு சிக்கன் லெக் பீஸில் 10 ரூபாய் தள்ளுபடி விலையில் வழங்குகிறார்.

இதுகுறித்துப் பேசிய கடை உரிமையாளர் அஞ்சல் சிங் ''பாகிஸ்தான் மனிதநேயத்தை என்றுமே பேணியதில்லை.அமைதியை நிலைநாட்ட அந்த நாடு எந்த முயற்சியையும் மேற்கொள்வதில்லை.எனவே மக்கள் அதனை உணர்ந்து பாகிஸ்தான் ஒழிக என்று கூற வேண்டும் என தெரிவித்தார்.

OTHER NEWS SHOTS

RELATED NEWS STORIES