ரெஸ்ட் யாருக்கு? 2-வது விக்கெட் கீப்பர் யாரு?.. திரில் 'சஸ்பென்ஸ்' வைக்கும் பிசிசிஐ!

Home > News Shots > தமிழ் news
By |

ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட இருக்கிறது.2 T20 போட்டிகள் மற்றும் 5 ஒரு நாள் போட்டிகள் இதில் அடக்கம்.வரும் பிப்ரவரி 24 மற்றும் 27ஆம் தேதிகளில் விசாகப்பட்டினம், பெங்களூருவில் T20 போட்டிகள்நடைபெற இருக்கிறது.ஒரு நாள் போட்டிகள் மார்ச் 2, 5, 8, 10, 13 ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கிறது.

இந்நிலையில் எந்த எந்த வீரர்கள் அணியில் இடம்பிடிப்பார்கள் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.இதுதொடர்பாக அணியை தேர்வு செய்வது குறித்து,வரும் பிப்ரவரி 15ம் தேதி தேர்வுக் குழு மும்பையில் கூடி ஆலோசிக்க உள்ளது.இந்த கூட்டத்தில் வீரர்களின் பணிச்சுமை மற்றும் ஐபிஎல் போட்டிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட இருக்கிறது.மேலும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் இடம்பெறும் அணிதான்,உலகக்கோப்பையில் பங்குபெறும் அணியாக இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.இதனால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதனிடையே ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் ரோகித் சர்மா இடம்பெறமாட்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது.இதுகுறித்து பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறுகையில் ''ஓய்வில் இருந்த கேப்டன் விராட் கோலி அணிக்கு திரும்புவதால்,ரோஹித் ஷர்மாவிற்கு ஓய்வு வழங்கப்படலாம்.ஆனால் ஒரு நாள் போட்டிகளில் எந்த பரிசோதனையும் செய்யப்படமாட்டாது'' என தெரிவித்தார்.

மேலும் தோனியை அடுத்து இரண்டாவது விக்கெட் கீப்பருக்கான போட்டி தான் தினேஷ் கார்த்திக் மற்றும் ரிஷப் பண்ட் இடையே உள்ளது. அதேபோல் மூன்றாவதாக இறங்கும் வீரருக்கான போட்டியும் உள்ளது என அவர் கூறியுள்ளார்.

BCCI, CRICKET, VIRATKOHLI, INDIA VS AUSTRALIA, ROHIT SHARMA, T20I, WORLD CUP 2019

OTHER NEWS SHOTS

RELATED NEWS STORIES