வரலாற்று சாதனை படைத்த இந்தியா...'உலக சாதனையை சமன் செய்த இந்திய வீரர்'!
Home > தமிழ் newsஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட், முன்னாள் தென் ஆப்ரிக்க வீரர் டிவிலியர்ஸ் உலக சாதனையை சமன் செய்தார்.
ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணி 10 ஆண்டுக்கு பின் அரிய வெற்றியை பதிவு செய்ததோடு, சுமார் 70 ஆண்டுகளுக்கு பின் ஆஸ்திரேலிய மண்ணில் நடந்த டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்டில் வெற்றி பெற்று வரலாற்று சாதனையை படைத்திருக்கிறது.
இந்நிலையில் இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட், முன்னாள் தென் ஆப்ரிக்க வீரர் டிவிலியர்ஸின் உலக சாதனையை சமன் செய்து அசத்தினார்.மேலும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டெஸ்டில், இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து 11 கேட்ச் பிடித்து சாதனை படைத்தார்.இதன் மூலம் இவர், ஒரே டெஸ்டில் அதிககேட்ச் பிடித்த விக்கெட் கீப்பர் என்ற முன்னாள் தென் ஆப்ரிக்க வீரர் டிவிலியர்ஸ் (11 கேட்ச், எதிர்- பாகிஸ்தான், 2013), முன்னாள் இங்கிலாந்து வீரர் ரசல் (11 கேட்ச், எதிர்- தென் ஆப்ரிக்கா, 1995) ஆகியோரின் உலக சாதனையை சமன் செய்தார்.
மேலும் ஒரே டெஸ்டில் அதிக கேட்ச் பிடித்த இந்திய விக்கெட் கீப்பர் என்ற பெருமை பெற்றார் பண்ட். இப்பட்டியலில் இந்தியாவின் மற்றொரு விக்கெட் கீப்பர் சகா (10 கேட்ச்) இரண்டாவது இடத்தில் உள்ளார்.
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- 'மோசமான பந்தில் சிக்ஸ் அடி'.. ஒரு ஓவர் முழுவதும் 'கமெண்ட்ரி' நிறுத்தம்!
- 'சேவாக், சச்சினுடன் விளையாட மாட்டேன்'... தோனியை விளாசிய கம்பீர்!
- 31 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வரலாறு காணாத வெற்றி!
- India Beat Australia By 31 Runs To Seal Historic Win In First Test At Adelaide
- IND v AUS | Rishabh Pant Sledging Pat Cummins Has Made The Internet LOL
- IND v AUS | Virat Kohli Shows Off His Impromptu Dance Skills While Fielding
- விராட் கோலிக்கு ஒரு நியாயம்?.. எங்களுக்கு ஒரு நியாயமா?
- Watch Video: 'கப்பை' எடுத்துக்கொண்டு 'செக்கை' தூக்கி எறிந்த கேப்டன்!
- 'அவருக்கு ஒரு நியாயம்...எனக்கு ஒரு நியாயமா'?....நீதிமன்றத்தில் குமுறிய பிரபல கிரிக்கெட் வீரர்!
- 'பேட்டிங்ல சொதப்பினாலும்,டான்ஸ்ல சொதப்பல'....நம்ம கேப்டன்:வைரலாகும் வீடியோ!