'ஃபேஸ்புக் பதிவில் இந்து அமைப்புகளுக்கு எதிரான கருத்து'....தாக்கப்பட்ட பிரபல இயக்குனர்!

Home > தமிழ் news
By |

சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் தரிசனம் செய்யலாம் என்ற விவகாரத்தில்,இந்து அமைப்புகளுக்கு எதிராக கருத்து தெரிவித்த பிரபல இயக்குனர் பிரியனந்தனன் தாக்கப்பட்டார்.இது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மலையாளத்தில், நெய்துகரன், புலிஜன்மம், சுஃபி பரஞ்ச கதா, பதிரகாலம் உட்பட பல படங்களை இயக்கியவர் பிரியனந்தனன்.இவர் சமீபத்தில்,சபரிமலைக்கு பெண்கள் செல்வதற்கு ஆதரவு தெரிவித்து,நடைபெற்ற  ’ஆர்போ ஆர்தவம்’ (மாதவிடாய் அசுத்தமல்ல) என்ற நிகழ்ச்சிக்கு ஆதரவு தெரிவித்திருந்தார்.மேலும் சபரிமலைக்கு செல்லும் பெண்களை தடுப்பது குறித்தும்,தனது முகநூல் பக்கத்தில் விமர்சனம் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து அவருக்கு கொலை மிரட்டல்கள் வந்த வண்ணம் இருந்தது.சில நாட்களுக்கு முன்பு சபரிமலை கர்மா சமிதி என்ற அமைப்பினர்,தங்களின் உணர்வுகளை புண்படுத்தி விட்டதாக கூறி இயக்குனர் பிரியனந்தனன் வீட்டின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.இதையடுத்து தான் முகநூலில் இட்ட பதிவினை நீக்கினார்.

இந்நிலையில் இன்று காலையில் தனது வீட்டிலிருந்து வெளியே சென்ற அவர் மீது,மறைந்திருந்த கும்பல் ஒன்று கரைத்து வைத்திருந்த 'பசு சாணத்தை' வீசிவிட்டு,அவரையும் தாக்கிவிட்டு சென்றது.நடந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த,இயக்குனர் பிரியனந்தனன் இந்து அமைப்புகள்தான் இந்த செயலில் ஈடுபட்டுள்ளது.அவர்கள் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்படும் என தெரிவித்தார்.இந்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

#SABARIMALAFORALL, #WOMENINSABARIMALA, #SABARIMALAPROTESTS, KERALA, MALAYALAM MOVIE DIRECTOR, PRIYANANDANAN

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS