இவர் தான் ''வேர்ல்ட் நம்பர் 1 ஃபீல்டர்''...'கிரிக்கெட் ஜாம்பவானே பார்த்து மெர்சலான இந்திய வீரர்'!

Home > News Shots > தமிழ் news
By |

இவர் களத்தில் நின்றால்,எதிரணி வீரர்களுக்கு வயிற்றில் புளியை கரைக்கும்.அப்படியொரு அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியவர் தென்னாப்பிரிக்க முன்னாள் வீரர் ஜாண்டி ரோட்ஸ்.49 வயதான ஜாண்டி, உலகில் உள்ள டாப் 5 ஃபீல்டர்களை பட்டியலிட்டுள்ளார்.

ஜாண்டி ரோட்ஸ் வெளியிட்டுள்ள பட்டியலில் இடம் பெற்றுள்ள ஒரே இந்திய வீரர் சுரேஷ் ரெய்னா. இது குறித்து ஐசிசிக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ள அவர் ''நான் சுரேஷ் ரெய்னாவின் மிகப்பெரிய ரசிகன்.அவரது ஆட்டத்தை காண்பதற்கு நான் மிகவும் ஆர்வமாக உள்ளேன்.மேலும் இந்தியாவில் ஆடுவது என்பது மிகவும் எளிதான காரியம் அல்ல.ஃபீல்டிங்கில் ரெய்னா தென்னாப்பிரிக்க வீரர்களை ஒத்த அணுகுமுறையை கையாளுகிறார்.

இந்திய ஆடுகளைங்களில் ஃபீல்டிங் செய்வது என்பது எளிதான விஷயம் அல்ல.ஆனால் ரெய்னா அதனை மிகவும் எளிதாக செய்துவிடுகிறார்.அவரது மனதில் இரண்டாவது எண்ணத்துக்கே இடமில்லை.டைவ் அடிக்க வேண்டுமா, வேண்டாமா என்றெல்லாம் அவர் யோசிப்பதே இல்லை.டைவ் அடிக்க தேவை இருந்தால் அதனை உடனே செய்துவிடுகிறார்.ஸ்லிப்போ, வட்டத்துக்குள்ளாகவோ அல்லது வட்டத்துக்கு வெளியிலோ கேட்ச் பிடிப்பது என்பது ரெய்னாவிற்கு கைவந்த கலையாகும்.என்னை பொறுத்தவரையில் உலகின் நம்பர் 1 ஃபீல்டர் நிச்சயம் ரெய்னா தான் என பெருமையுடன் தெரிவித்துள்ளார்.

முன்னதாக ஜாண்டி ரோட்ஸ் வெளியிட்டுள்ள பட்டியலில் இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்தை சேர்ந்த வீரர்கள் தலா ஒருவரும், இரண்டு தென்னாப்பிரிக்க வீரர்களும் இடம்பெற்றுள்ளனர். அதன்படி உலகின் டாப் ஐந்து ஃபீல்டர்களாக ஆன்ட்ரூ சைமண்ட்ஸ், கிப்ஸ், பால் காலிவுட், ஏபி டிவில்லியர்ஸ் மற்றும் சுரேஷ் ரெய்னா ஆகியோர் அதில் இடம்பெற்றுள்ளனர்.

SURESHRAINA, CRICKET, BCCI, ICC, JONTY RHODES, INDIAN FIELDER

OTHER NEWS SHOTS

RELATED NEWS STORIES