இந்த வயதிலும் கஜா புயலில் களப்பணி: ஹீரோவாகும் ஒய்வு பெற்ற ஊழியர்!

Home > தமிழ் news
By |

கஜா புயல் தமிழகத்தை சூறையாடியதில் 11 பேர் பலியானதொடு மின் கம்பங்கள், மரங்கள் , வீடுகள், பெட்ரோல் பங்க், டோல்கேட் கூரைகள் உட்பட பலவிதமான சேதங்கள் அடைந்துள்ளன.  இந்த நிலையில் கஜா புயல் கரையைக் கடந்த அதே நேரம் காலை 6 மணி முதல் ஒரு 60 வயது மதிக்கத்தக்க வயதானவர், கொட்டும் மழையில் நின்று சாலையில் அறுந்து தொங்கும் மின் கம்பிகளை அப்புறப்படுத்திக் கொண்டிருந்தார். அவர் யார் என கேட்டு எடுக்கப்பட்ட வீடியோ வைரலாகி வருகிறது.


தாள முடியாத பேரிடர் கண் முன்னே நிகழ்த்தும் அசம்பாவிதங்களை கண்டதனால், ஓய்வு பெற்ற மின்சாரத் துறை ஊழியரான பாலசுப்ரமணியம் என்பவர், தன்னுடைய இந்த வயதிலும் தன்னார்வத்தோடு களப்பணி ஆற்றியிருப்பதால் இணையத்தில் ஹீரோவாகியுள்ளார்.  இதுபற்றி பேசும் அவர், ‘பாதையில மின்சார கம்பிகளும் ஒயர்களும் கிடக்குல.. எப்படி போவாங்க’ என்று தன் பதிலை ரத்தினச் சுருக்கமாக சொல்லிவிட்டு, மீண்டும்  தன் தார்மீக பணியை மேற்கொண்டிருக்கும் அந்த மனிதநேயமிக்க முன்னாள் அரசு அதிகாரியின் செயல் பலரையும் நெகிழவைத்ததோடு இணையத்தில் இவரது வீடியோவை பார்த்த பலரும் அவருக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.


எனினும் சிலர், இதுபோன்ற காலங்களில் தன்னலம் இல்லாமல் பணிபுரிபவர்களை, வீடியோக்களை எடுத்து அடையாளப் படுத்துவது நல்ல காரியம்தான். இதன் மூலம் மனிதம் என்கிற எண்ணம் அனைவரிடமும் தழைத்தோங்கும்தான். அதே சமயம், களத்தில் இறங்கி வேலை பார்ப்பவர்கள் இந்த அங்கீகாரத்தையெல்லாம் எதிரபார்க்காமல் தங்கள் பணிகளை மட்டுமே விரும்பிச் செய்வதாக குறிப்பிடுகின்றனர்.

 

GAJACYCLONE, HEAVYRAIN, TAMILNADU, TNEB, BALASUBRAMANIAM, RETIREDOFFICER, HUMANITY

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS