'ட்ரெய்னில் வந்தது' ஆட்டிறைச்சியா? நாய் இறைச்சியா?..ஆய்வில் புதிய தகவல்!

Home > தமிழ் news
By |

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் கைப்பற்றப்பட்ட இறைச்சி நாய்க் கறி என சர்ச்சை எழுந்த நிலையில்,அது ஆடுக் கறிதான் என ஆய்வில் தெரியவந்துள்ளது.

 

கடந்த 17-ஆம் தேதி,ஜோத்பூரில் இருந்து மன்னார்குடி செல்லும் விரைவு ரயில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு வந்தது.அப்போது அந்த ரயிலில் அழுகிய இறைச்சி கொண்டுவரப்பட்டுள்ளதாக உணவு பாதுகாப்புத் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், மாநகராட்சி அதிகாரிகளுடன் சென்ற உணவு பாதுகாப்புத் துறையினர், பார்சல்கள் வைக்கப்பட்டிருக்கும் பெட்டியில் சோதனை மேற்கொண்டனர்.

 

சோதனையின் முடிவில் 5-க்கும் மேற்பட்ட பெட்டிகளில் 2000 கிலோ இறைச்சி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட இறைச்சியின் வால் நீளமாக இருந்ததால்,அது நாய்க்கறியாக இருக்குமோ என்ற சந்தேகம் அதிகாரிகளுக்கு எழுந்தது. அப்படியானால், சென்னை ஹோட்டல்களில்  வாடிக்கையாளர்களுக்கு தெரியாமலேயே, ஆட்டுக்கறியுடன் நாய்க்கறி கலந்து விற்பனை செய்யப்படுகிறதா என்ற சந்தேகமும் அதிகாரிகளுக்கு எழுந்தது.இந்த விவகாரம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

 

இந்நிலையில் ஹோட்டல்களுக்கு கறி விற்பனை செய்யும் டீலர்கள், தாங்கள் ஆட்டுக்கறியை வாங்கவே ஆர்டர் கொடுத்ததாகவும், ஆர்டர் அளித்ததற்கான ஆவணங்கள் தங்களிடம் இருப்பதாகவும் தெரிவித்தனர். இதனையடுத்து அதிகாரிகள் கைப்பற்றிய இறைச்சி நாய்க்கறியா அல்லது ஆட்டுக்கறியா  என்பதை கண்டறிய, அவற்றில் சில துண்டுகள் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் பரிசோதனை முடிவுகள் தற்போது வெளிவந்துள்ளது.

 

ஆய்வானது சென்னை கால்நடை மருத்துவ கல்லூரியில் நடைபெற்றது.அதன் இறுதி முடிவில்,எழும்பூர் ரயில் நிலையத்தில் கைப்பற்றப்பட்ட இறைச்சி ஆட்டு இறைச்சியே என்பது தெரியவந்துள்ளது. இது ஹோட்டல்களில் வழக்கமாக அசைவம் சாப்பிடுபவர்களுக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளது.

GOAT MEAT, DOG MEAT, CHENNAI, EGMORE

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS