'அழுதுகொண்டு இருக்க போவதில்லை'...இன்னொரு மகனையும் அனுப்புவேன்...சலுயூட் போடவைத்த தந்தை!

Home > News Shots > தமிழ் news
By |

தீவிரவாதிகளின் கோழைத்தனமாக தாக்குதலில் தனது மகன் இறந்த போதிலும்,தனது இன்னொரு மகனையும் ராணுவத்திற்கு அனுப்பி தீவிரவாதிகளுக்கு பாடம் புகட்டுவேன் என,இறந்த வீரரின் தந்தை கூறியிருப்பது அனைவரையும் நெகிழ செய்துள்ளது.

காஷ்மீரில் மத்திய ரிசர்வ் பாது‌காப்புப் படையினர் மீது,தீவிரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதலை நடத்தினார்கள்.இந்த கோழைத்தனமாக தாக்குதலில் 44 வீரர்கள் வீரமரணம் அடைந்தார்கள்.இந்த தாக்குதலில் வீர மரணமடைந்த வீரர்களில் ஒருவர் தான் ரத்தன் தாகூர்.இவர் பிகார் மாநிலத்தின் பகல்பூரை சேர்ந்தவர்.மகனின் வீர மரணம் குறித்து மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பேசிய அவர் '' எனது மகன் நாட்டிற்காக வீர மரணம் அடைந்திருக்கிறான்.அவனை இந்திய தாயின் சேவைக்காக தியாகம் செய்திருக்கிறேன்.

தீவிரவாதிகளை அளிப்பதற்காக எனது இன்னொரு மகனையும் நாட்டிற்காக அளிக்க தயாராக இருக்கிறேன்.எனது மகனின் வீரமரணம் நிச்சயம் வீண்போகாது.வீரர்களின் மரணத்திற்கு காரணமான ஒவ்வொரு தீவிரவாதியும் நிச்சயம் பதில் சொல்லவேண்டும்.பாகிஸ்தானிற்கு நிச்சயம் பதிலடி கொடுக்க வேண்டும் என மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பேசினார்.

மகனை இழந்த நிலையிலும் அவர் இவ்வாறு பேசியது பலரையும் நெகிழ செய்துள்ளது.ரத்தன் தாகூரின் மரணம் அவரது சொந்த கிராமத்தில் கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

OTHER NEWS SHOTS

RELATED NEWS STORIES