‘இது நம்ம லிஸ்ட்லயே இல்லயே?’.. SBI வங்கிக்கு 1 கோடி ரூபாய் அபராதம் விதித்த RBI!

Home > News Shots > தமிழ் news
By |

எப்போதுமே தேசிய பொதுத்துறைகளின் கட்டமைப்புகளுக்கு உட்பட்ட வங்கிகளை ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு ஒருமுறை மத்திய ரிசர்வ் வங்கி சோதனையிடுவது வழக்கமான ஒன்று.

காரணம் மத்திய தேசிய ரிசர்வ் வங்கிதான், இந்திய பொதுத்துறை மற்றும் பொதுத்துறை சார்ந்த வங்கிகளின் ஒழுங்கு நடவடிக்கைகளை கண்காணித்துவருகிறது. இதற்கென செக்‌ஷன் 47-ன் ஏ பிரிவின் கீழ் மத்திய ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளுக்கும் அதிகாரத்துக்கும் உட்பட்டு செயல்பட வேண்டிய பல வங்கிகள் விதிமுறைகளை மதிக்காமல் நடந்துகொண்டுள்ளதை அவ்வப்பொது ஆர்பிஐ சுட்டிக் காட்டி வருகிறது.

அதுமட்டுமல்லாமல், அவ்வாறு விதிமுறைகளை மதிக்காத பொதுத் துறை வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அளிக்கும் தண்டனையோ மிகவும் கடுமையாக இருந்துவருவதை கடந்த ஒரு வருடமாகவே காண முடியும். அவ்வகையில் மத்திய அரசின் ரிசர்வ் வங்கியின் அதிகாரத்துவ தலைமையை ஏற்று நடத்தப்பட்டு வரும் பொதுத்துறை வங்கிகள் ரிசர்வ் வங்கியின், 1947-ஆம் ஆண்டுக்கான ஒழுங்கு விதிகளை பின்பற்றுவது கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இதில் பல வங்கிகள் சிக்கியதுபோல தற்போது, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) மாட்டிக்கொண்டுள்ளது. இந்த வங்கிகளில் குறிப்பிட்டதொரு காரணத்தைச் சொல்லி கடன் பெறுபவர்களின் உண்மைத் தன்மையையும், அவர்கள் பெறக்கூடிய கடன் தொகையை உண்மையில் வங்கியில் கடன் வாங்கும்போது சொன்ன காரணத்துக்காகத்தாம் செலவிடுகிறார்களா? என்பதையெல்லாம் கண்காணிக்காததால் எஸ்பிஐக்கு அதிரடியான அபராதத் தொகையாக ரூ.1 கோடியை கட்டச் சொல்லி, ஆர்பிஐ உத்தரவிட்டுள்ளது.

எஸ்பிஐ வங்கி மீதான ரிசர்வ் வங்கியின் இந்த அதிரடி அபராதத் தொகை உத்தரவு இன்னும் பிற பொதுத் துறை வங்கிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் தன்னிடம் கடன் பெற்ற மற்றும் இந்த பிரச்சனைக்கு காரணமாக இருக்கும் அந்த கணக்குதாரரைப் பற்றிய விபரங்களை எஸ்பிஐ இன்னும் வெளிவிடவில்லை.

SBI, RBI, BIZARRE, BANK, POWERS CONFERRED, BANKING REGULATION ACT, PENALTY

OTHER NEWS SHOTS

RELATED NEWS STORIES