‘ஃபிட்டா இல்லன்னா எதுக்கு ஆஸ்திரேலியா வரை அழச்சிட்டு போகனும்?’.. வறுத்தெடுத்த ட்விட்டர்வாசிகள்!

Home > தமிழ் news
By |

ஆஸ்திரேலியாவின் பெர்த் டெஸ்ட்டில் ஜடேஜா நீக்கப்பட்டதற்கான காரணம் குறித்த சர்ச்சையில் ரவி சாஸ்திரியை ட்விட்டர் வாசிகள் வறுத்தெடுத்து வருகின்றனர்.  முன்னதாக  ஜடேஜா ஏன் கடைசி டெஸ்டில் இல்லை என்கிற ரசிகர்களின் கேள்விக்கு, அவர் சிகிச்சை  மேற்கொண்டிருந்ததாலும், 4 நாட்கள் தோள்பட்டை வலியால் அவதிப்பட்டதாலும், அவரை அணியில் சேர்க்கும் ரிஸ்க்கினை தவிர்த்ததாகவும் ரவி சாஸ்திரி தெரிவித்தார்.

 

அதோடு 80 சதவீதத்துக்கும் மேல், ஃபிட்டாக மாறினால் ஜடேஜாவை சேர்த்துக் கொள்ளலாம் என்றும் ரவி சாஸ்திரி குறிப்பிட்டிருந்தார். இதற்கு கவுண்ட்டர் அடித்த ரசிகர்கள், ‘பிறகு, ஃபிட்டாக இல்லை எனில் எதற்காக ஜடேஜாவை ஆஸ்திரேலியா வரைக்கும் அழச்சிட்டு போகனும், 12வது வீரராக இணைத்து சப்ஸ்டிட்யூட் வீரராக களமிறக்கனும்?’ என்றெல்லாம் கேட்டு வறுத்தெடுத்துள்ளனர்.

 


எனினும் தொடக்க ஆட்டக்காரர்கள் ரன் குவிக்காததால், கோலி மற்றும் புஜாராவுக்கு அதிக அழுத்தம் இருந்ததை கடந்த முதல் 2 டெஸ்ட்டுகளிலும் பார்க்க முடிந்ததாகவும் கூறிய ரவி சாஸ்திரி, வலுவான ஆட்டக்காரர்கள் ரன் குவிக்கவில்லை என்றால் அது அணியின் வெற்றியை பாதிக்கும் என்றும் கூறி விளக்கமளித்திருந்தார்.

 

JADEJA, RAVI SHASTRI, TWITTER

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS